சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் மத தாக்குதல் அதிகரித்துள்ளது.. அமெரிக்காவின் யுஎஸ்சிஐஆர்எப் கடும் கண்டனம்.. எச்சரிக்கை!

இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது என்று அமெரிக்க அரசுக்கு சொந்தமான சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று அமெரிக்க அரசுக்கு சொந்தமான சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

USCIRF என்று அழைக்கப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்பது அமெரிக்க அரசுக்கு கீழ் இயங்கும் ஒரு ஆணையம் ஆகும். சுதந்திரமாக செயல்பட கூடிய இந்த ஆணையம் அமெரிக்க அரசுக்கும், அந்நாட்டு அதிபருக்கும் கொள்கை திட்டங்களை வகுத்து கொடுக்கும்.

உலகம் முழுக்க இருக்கும் மத ரீதியான பாதுகாப்பு சண்டை குறித்து தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான பரிந்துரைகளை அந்நாட்டு அரசுக்கு இந்த அமைப்பு வழங்கும். உலகம் முழுக்க மத ரீதியான தாக்குதல்கள் மற்றும் செயல்பாடுகளை இந்த ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பலரை சந்தித்தார்.. கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. சென்னையில் தொடரும் அதிர்ச்சிபலரை சந்தித்தார்.. கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. சென்னையில் தொடரும் அதிர்ச்சி

அறிக்கை

அறிக்கை

இந்த நிலையில் 2020ம் ஆண்டிற்கான அறிக்கையை இந்த ஆணையம் இப்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவை இந்த ஆணையம் ''குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய நாடு - Country of Particular Concern (CPC) '' என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.

என்ன மாதியான பட்டியல்

என்ன மாதியான பட்டியல்

Country of Particular Concern (CPC) என்பது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் உருவாக்கும் ஒரு மிக முக்கிய பட்டியல் ஆகும். எந்த நாட்டில் எல்லாம் மோசமாக மத சுதந்திரம் உள்ளது, மத தாக்குதல்கள் உள்ளதோ அந்த நாடுகளை எல்லாம் இந்த பட்டியலில் இந்த ஆணையம் சேர்க்கும். இப்படி பட்டியலில் இருக்கும் நாடுகள் மீது அமெரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரை செய்யும்.

இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது

இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது

இந்த பட்டியலில்தான் இந்தியா தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது. அங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இதை அந்நாட்டு மத்திய அரசு அனுமதிக்கிறது.

மத்திய அரசு செயல்படுகிறது

மத்திய அரசு செயல்படுகிறது

அந்நாட்டு மத்திய அரசு இதில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது. அதேபோல் அவர்களுக்கு எதிரான வெறுப்பு உமிழும் பேச்சுக்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் பாஜக தலைவர்கள் நாடு முழுக்க என்ஆர்சி கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதேபோல் சிஏஏவை அமல்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனால் பலகோடி இஸ்லாமிய மக்கள் நாடுகளை, வீடுகளை இழக்க நேரிடும். பலர் குடியுரிமையை இழப்பார்கள், என்று கூறியுள்ளது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

மேலும், இந்தியா மீது இதனால் கடுமையாக நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவிற்கு அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதில், அமெரிக்க அரசு இந்தியா மீது இதனால் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அதேபோல் இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அதிகாரிகள், நபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டும்.

மோசமான நிலை

மோசமான நிலை

இந்தியாவில் சிறுபான்மையினர் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். நாளுக்கு நாள் இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது என்று அந்த அறிக்கையில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 2004ல் குஜராத்தில் கலவரம் நடந்த போது இதேபோல் இந்தியாவை சிபிசி லிஸ்டில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்து இருந்தது. அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அதே லிஸ்டில் இந்தியாவை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்துள்ளது.

English summary
USCIRF put India in 'Country of Particular Concern' list over the religious freedom in the country in recent times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X