திக்கி திணறி திருக்குறள் சொன்ன முருகன்! "ஜி போல டெலிப்ராம்ப்டர் பயன்படுத்துங்க" திமுக எம்.பி கிண்டல்
சென்னை: பிரதமர் பங்கேற்ற விழாவில் திருக்குறள் சொல்லும்போது திக்கி தடுமாறி பேசிய எல்.முருகனின் வீடியோவை பகிர்ந்த திமுக எம்.பி.செந்தில்குமார் டெலிப்ராம்பரை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமருக்கு வரவேற்பு
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டு நின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அகம் மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி காரை விட்டு வெளியே தலைகாட்டி கை அசைத்தார்.

எல்.முருகன் வரவேற்புரை
இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரையாற்றினார். அப்போது "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றல்மிகு மு.க.ஸ்டாலின் அவர்களை வருக வருக என வரவேற்று..." என்று எல்.முருகன் சொல்லி முடிப்பதற்குள், அரங்கம் எங்கும் கரகோஷம் ஒலிக்கத் தொடங்கியது. எல்.முருகன் தனது வரவேற்புரையை தொடர முடியாத அளவுக்கு கரகோஷங்களை முதலமைச்சரின் பெயரை கேட்டவுடன் விழாவில் பங்கேற்றவர்கள் எழுப்பினர். இதனால், சிறிது நேரம் பேசாமல் அரங்கையே விழித்துப் பார்த்தார் எல்.முருகன்.

தடுமாறிய எல்.முருகன்
இந்த நிலையில் முருகனின் வரவேற்புரை வீடியோவை திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் எல்.முருகன் தடுமாறியபடி இந்தி, ஆங்கிலத்தில் பேசிவிட்டு திருக்குறளை சொல்லப்போகிறேன் என கூறி சிறிது நேரம் திணறினார். இதனால் அரங்கிலிருந்தவர்கள் சத்தம் எழுப்ப, ஒருவழியாக எல்,முருகன் திருக்குறளை சொல்லிமுடித்தார். "இதற்கு தான் முருகன் சார், நம்ம ஜி மாதிரி டெலிப்ராம்ப்டரைப் பயன்படுத்த வேண்டும்" என செந்தில்குமார் கருத்திட்டுள்ளார்.