சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: முகக் கவசத்தை முகத்தில் போட்டாலே, கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், மருத்துவ நிபுணர் குழு, ஆலோசனை நடத்தினர். இது முதல்வருடனான 5வது ஆலோசனை கூட்டமாகும்.

பின்னர் நிருபர்களிடம் மருத்துவர் குழுவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கேஸ்கள் அதிகரித்து வருவது எதிர்பார்த்ததுதான். இது புது விஷயம் கிடையாது. இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சென்னை போன்ற சிட்டிகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதால், இது எதிர்பார்த்ததுதான்.

ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது

நோய்கள்

நோய்கள்

லாக்டவுனால், நாம் என்ன சாதித்தோம் என்றால்.. நம்மிடம் தயார் நிலை உள்ளோம். கேஸ்கள் அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய தயார் நிலையில் நாம் உள்ளோம். இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியம். உடல் வலி, தலைவலி, காய்ச்சல் இருந்தால் வேலைக்கு செல்ல வேண்டாம். பிறரை சந்திக்கும் போது தான் வியாதி பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.

முகத்தில் அணியுங்கள்

முகத்தில் அணியுங்கள்

முக கவசம் என்பது மிகவும் கட்டாயம். கார்களில் செல்லும்போது முககவசம் கழுத்தில் தொங்குகின்றது. யாருடனாவது உட்கார்ந்து பேசும்போது முககவசம் கீழே இழுக்கப்படுகிறது. ஆனால், அப்போதுதான் முகக்கவசம் அவசியம். முகக் கவசத்தை கீழே இழுத்து விடாமல் பயன்படுத்தவும்.

செருப்பு மாட்டுவது போல

செருப்பு மாட்டுவது போல

எப்படி வெளியே போகும்போது செருப்பு மாட்டிக் கொண்டு செல்கிறோமா, அதுபோல முக கவசம் அணிவது கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும். எச்சில் துப்பக் கூடாது. முகக்கவசம் அணியும் பழக்கம் உள்ள நாடுகளில் வைரஸ் பரவல் குறைவாக இருக்கிறது.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வைரஸ் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வேண்டும். மீடியாக்களும், நோய் ரொம்பவே பரவி விட்டது என்று பெரிதுபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம். சென்னையில் சமூக பரவல் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

English summary
Using mask will reduce corona virus spread, says medical expert committee, after meeting CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X