சிக்ஸர் அடித்த பாஜக.. ஸ்கெட்ச் போட்டு மெகா "புள்ளி"யை தூக்கி.. கதர் கட்சி இப்படி மிஸ் பண்ணிருச்சே..!
சென்னை: காங்கிரஸின் பிரபலமான நபராக கருதப்படும், பிரியங்கா மவுரியா, விரைவில் பாஜகவில் சேரப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது உபி காங்கிரசுக்கு மேலும் சறுக்கலை தந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது... இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபியை மீண்டும் தக்க வைத்து கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த முறையாவது உபியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸூம் தீவிரம் காட்டி வருகிறது.. இதற்காகவே பிரியங்காகாந்தி எத்தனையோ விதமான அதிரடிகளை பிறப்பித்து வருகிறார்.
டிவி விவாதத்தில் பேச சான்ஸ் கொடுக்காத நெறியாளர்.. திடீருன்னு பெண் செய்த காரியம்.. அம்மாடியோவ்!

உபி காங்கிரஸ்
குறிப்பாக, பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. 40 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்படும் என்று சொல்லி இருந்த நிலையில், அதையும் செய்து காட்டி உள்ளார்.. காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரின் 125 முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டபோது, அதில், 50 பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.. இந்த 50 பெண்களுமே பலம் வாய்ந்தவர்கள்.. பிரியங்காவின் இந்த மூவ் பார்த்து, பாஜக திகைத்து போனது என்னவோ உண்மைதான்.

பாஜக
எனினும் இதே விஷயத்தில் திடீரென ஒரு சறுக்கல் காங்கிரசுக்கு அங்கு கிடைத்துள்ளது.. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரியங்கா மவுரியா விலகி உள்ளார்.. இவர் காங்கிரஸில் படுஃபேமஸானவர்.. இவர்தான் இப்போது திடீரென விலகியுள்ளார்... அத்துடன் பாஜகவிலும் இணைந்து காங்கிரஸுக்கே ஷாக் தந்துள்ளார்.. எப்போது உத்திர பிரதேசத்தில் தேர்தல் என்றாலும், அரசியல் பிரமுகர்கள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது இயல்பானதுதான்.. என்றாலும், இந்த ட்விஸ்ட்டை காங்கிரஸ் எதிர்பார்க்கவே இல்லை.

பிரியங்கா மவுரியா
காரணம், உபி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரியங்கா மவுரியா சார்பாக எப்போதுமே போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படும்.. அந்த போஸ்டர்களில், "நான் ஒரு பெண்.. என்னால் போராட முடியும்" என்ற வரிகளுடன் பிரியங்கா மவுரியா போட்டோக்களுடன் போஸ்டர்களில் இடம்பெறும்.. பிரியங்கா மவுரியா விதவிதமான போட்டோக்களும் சரி, இந்த வாசகமும் சரி, உபியில் பெரும் வைரலானவை..

பிரச்சாரம்
இந்த வசனம் இவ்வளவு பிரபலமடைய காரணம், பிரியங்கா காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வாசகத்தைதான் அடிக்கடி சொல்லி வருவார்.. இதையே தன்னுடைய பிரச்சாரத்துக்கும் பிரியங்கா மவுரியா பயன்படுத்தி கொண்டிருந்தார்.. கடைசியில் பிரியங்கா மவுரியாவுக்கான அடைமொழியாகவே அது மாறிவிட்டது.. மக்கள் யாரை கேட்டாலும் இந்த வாசகத்தை டக்கென சொல்லி விடுவார்கள்.. அந்த அளவுக்கு காங்கிரஸில் பரிச்சயமான பிரியங்கா மவுரியா, இப்போது எதற்காக பாஜக சென்றார் என்ற குழப்பமும், சந்தேகமும் உபி மக்களுக்கே ஏற்பட்டுள்ளது.

முகம் வேணுமா?
இதுகுறித்து பிரியங்கா மவுரியாவே வாய் திறந்துள்ளார்.. "இந்த காங்கிரசுக்கு என்னுடைய முகம் வேணும்.. என்னுடைய வசனம் வேண்டும்.. என்னுடைய போஸ்டர்குளை வைத்து காங்கிரசுக்கு ஆதாயம் வேண்டும்.. ஆனால், எனக்கு தேர்தலில் சீட் மட்டும் தர மாட்டாங்களா? எனக்கு போட்டியிட சீட் தரவில்லை.. நிராகரித்து விட்டார்கள்.. நான் ஒரு பெண் என்பதாலும், ஒபிசி வகுப்பை சேர்ந்தவள் என்பதாலும் தான் நிராகரிக்கப்பட்டு விட்டேன்...

சறுக்கல்
ஒருவேளை பிரியங்கா காந்தியின் உதவியாளருக்கு லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு என்கிட்ட பணம் இருந்திருந்தால் எனக்கும் சீட் கிடைத்திருக்கும் போல.. விரைவில் பாஜவுடன் நான் இருக்க போகிறேன்.. நீங்கள் அதை பார்க்கதான் போறீங்க" என்று தெரிவித்துள்ளார்.... இத்தனை காலமும் காங்கிரஸின் முகம் என்று மக்களால் அறியப்பட்ட பிரியங்கா மவுரியா, பாஜக பக்கம் சாய்ந்துள்ளது, காங்கிரசுக்கு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறறது.. எனினும் இதை பிரியங்கா காந்தி எப்படி சரிக்கட்ட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!