India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமைச் செயலகத்தின் கதவை யாரும் தட்டக் கூடாது.. அன்பாக பொங்கி எழுந்த இறையன்பு.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு மக்கள் கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள் என தலைமைச் செயலாளர் வெ இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், மாவட்ட ஆட்சியர் என்ற மகத்தான பொறுப்பில் இருக்கும் இளம் தோழர்களே!, இன்று முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்பது சிறப்புத்திட்டம். போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் அந்த மனுக்களை அணுகியதால் அத்தனை மனுக்களுக்கும் விடிவு கிடைத்தது.

'இனிமேல் இப்படித்தான் இருக்கணும்'.. அரசு ஊழியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்!'இனிமேல் இப்படித்தான் இருக்கணும்'.. அரசு ஊழியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்!

சிந்திக்க வேண்டும்

சிந்திக்க வேண்டும்

அதேபோன்று அனைத்து நேர்வுகளில் நாம் செயல்படுவது சாத்தியமில்லை. ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவிகின்றன. முத்துக் குளிக்க மூச்சுப்பிடித்தவன் அதைப் போலவே எல்லா நேரங்களிலும் செயல்பட இயலாது. இந்த மனுக்கள் ஏன் வந்து இங்கு குவிகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

வட்டம்

வட்டம்

மாவட்டம், வட்டம், சிற்றூர் அளவிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், உரிய காலத்தில் தீர்க்கப்படாமலிருப்பதால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள்.

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சினை

மாவட்ட நிர்வாகம் மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே துரிதமாக தீர்ப்பதற்கு முனைய வேண்டும். முனைப்பாக இந்நேர்வில் கனிவோடும், பணிவோடும் செயல்பட்டால் அவர்கள் தலைமை செயலகத்தின் கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது. இலக்குகளை அடைவது மட்டுமல்ல, மக்கள் இதயங்களை குளிர்விப்பதும் அரசுப்பணியின் ஓர் அம்சமே.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்

அதிக மனுக்களை தீர்த்து வைக்கிற மாவட்ட கலெக்டருக்கு கேடயங்கள் வழங்குவதைவிட குறைவான மனுக்களை தலைமை செயலகம் எந்த மாவட்டத்தில் இருந்து பெறுகிறதோ, அந்த மாவட்டத்துக்கு அளிக்கிற நடைமுறையை கொண்டு வரும் அளவு உயர, உயரப் பறக்கும் பறவையைப் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வெற்றி பெறுவோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசு அலுவலகம்

அரசு அலுவலகம்

இந்த கடிதம் திடீரென எதற்காக எழுதப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. ஒரு அரசு சிறப்பானது என்றால் அது தொடர்புடைய அனைத்து அரசு இயந்திரங்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். எல்லா கோரிக்கைகளையும் முதல்வரே தீர்க்க வேண்டும் என்றால் அவர் பார்த்து பார்த்து செய்த அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவேதான் அனைத்து மனுக்களும் தலைமை செயலகத்திற்கு வராமலேயே தீர்வு காணப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் இறையன்பு. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை அனைவரும் மக்கள் பணிகளை ஆற்றினால் மட்டுமே அந்த அரசுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்தே இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

புத்தகங்கள்

புத்தகங்கள்

தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவுடன் , தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க வேண்டாம் என இறையன்பு வெளியிட்ட அறிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. அது போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போதும் சரி , தனக்கு ஆடம்பர உணவுகள் வேண்டாம் என்றும் சைவ உணவுகளே போதும் என்று கேட்டுக் கொண்டார். அது போல் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்துவிட்டு புதிய சாலைகளை போடுமாறு அறிவுறுத்தினார். இப்படி ஒரு தலைமைச் செயலாளரா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இவர் எழுதிய கடிதத்தில் அன்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். எப்போதுமே அன்புதான் ஜெயிக்கும் என்பதை நிரூபித்துவிட்டார் இறையன்பு.

English summary
TN Chief Secretary V. Iraianbu in his letter says about Ungal thoguthiyil muthalamaichar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X