சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு

Chennai High court ordered corporation to vacate un authorized shops in Marina beach.

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் உரிமம் இல்லாமல் செயல்படும், 2000 கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது சென்னை, உயர் நீதிமன்றம்.

Vacate un authorized shops in Marina beach: Chennai High court

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகியிருந்தார். மெரினா கடற்கரையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மெரினாவில், உரிமம் பெறாமல் 2000 கடைகள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவற்றை, அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம், ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலோர விதிமுறைகளை மீறாமல் உணவகங்கள், மிதி வண்டி நிறுத்தும் இடம் அமைக்கிறோம் என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் லைசென்ஸ் கொடுங்கள்.

நீங்கள் அமைக்க கூடிய உணவகங்கள், மிதி வண்டி நிறுத்துமிடங்களால், கடல் பாதுகாப்பு மண்டலத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப். 1 ல் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கை, பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Chennai High court ordered corporation to vacate un authorized shops in Marina beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X