சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரத்தில் வட கலை மற்றும் தென் கலை பிரிவினர் நடுவே இன்று மோதல் வெடித்து கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலையும், மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் நடைபெறும், கருட சேவை உற்சவம், உலகப்பிரசித்தி பெற்றதாகும். கருடசேவை உற்சவம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

திருமங்கையாழ்வார் பாசுரம்

திருமங்கையாழ்வார் பாசுரம்

இந்நிலையில், பெருமாள், காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடுபறி வைபோகத்திற்காக எழுந்தருளினார். அப்போது, அங்கு தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயற்சி செய்தனர். ஆனால், வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைகலப்பு

கைகலப்பு

இதனால் அங்கு கூச்சல், குழப்பமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு பிரிவினர் நடுவே கை கலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் உள்ள ஒருவருக்கொருவர் குறுக்கே புகுந்து சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் உள்ளே வந்து, இரு தரப்பையும் விலக்கி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் முறை இல்லை

முதல் முறை இல்லை

ஒருவழியாக, இரு பிரிவினரும் பிரிந்து சென்ற நிலையில் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் இருதரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுபோல மோதல் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த வருடமும் இப்படியான பிரச்சினை நடந்தது. சாதுவாக காணப்படும் பக்தர்களா கோயில் என்றும் பார்க்காமல் இப்படி அடிதடியில் ஈடுபட்டனர் என்று, கேட்கும் அளவுக்கு, ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

என்ன வித்தியாசம்?

என்ன வித்தியாசம்?

வட கலை மற்றும் தென் கலை நடுவே 18 வித்தியாசங்களாவது உண்டு என்பர். வட கலை வைணவர்கள், திருமாலையும், லட்சுமி தேவியையும் சரிசமமாக பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள், அதிக வடமொழி கலாச்சாரங்கள் உண்டு. தென் கலை வைணவர்களும், லட்சுமி தேவியை வணங்குவார்கள் என்றாலும், திருமாலை மட்டுமே மூல தெய்வமாக கருத வேண்டும் என்ற கொள்கை கொண்டோர். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு போன்றது. இதுதான் அடிப்படை வித்தியாசமாகும்.

English summary
Vadakalai, Thenkalai fight erupt at Kanchipuram Varadaraja Perumal Temple Brahmotsavam 2019, video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X