சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடபழனி, கிண்டி, தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்.. போக்குவரத்துதுறை முக்கியஅறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க போக்குவரத்துதுறை முக்கிய அறிவிப்பு- வீடியோ

    சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மதுரவாயல் பைப்பாஸ் வழியாக சென்று வருகின்றன. இனி பொதுமக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் மதுரவாயலுக்கு பதில் இனி வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக காலை மாலை வேளைகளில் வடபழனி, கிண்டி பகுதியில் மிக மோசமாக இருக்கும்

    Vadapalani, Guindy, Ashok Pillar, Tambaram people dont go koyambedu for govt bus

    குறிப்பாக மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் மதுரவாயல் பைப்பாஸ் வழியாக சென்று வருகின்றன. இதனால் தாம்பரம், கிண்டி, வடபழனி, அசோக்பில்லர் பகுதிகளில் இருந்து வெளியூர் செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி.. இந்தி குறித்த கேள்வியால் தர்மசங்கடமான செங்கோட்டையன் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி.. இந்தி குறித்த கேள்வியால் தர்மசங்கடமான செங்கோட்டையன்

    இப்போது மெட்ரோ ரயில் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. மெட்ரோ ரயில்களும் ஓடி வருகின்றன. இதனால் மீண்டும் கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகளை வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களின் வசதிக்கேற்ப இனி வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தனியார் ஆம்னி பேருந்துகள் பல வடபழனி, அசோக்பில்லர், கிண்டி, தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் பலர் தனியார் பேருந்துகளை நாடி செல்கிறார்கள். இப்போது அரசு பேருந்தும் வடபழனி. அசோக்பில்லர், கிண்டி, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டால் அதிலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    chennai Vadapalani, Guindy, Ashok Pillar, Tambaram people no need to go to koyambedu for bus pickup
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X