சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோ செம டென்ஷன்.. உங்க கேள்வியில் ஏதோ உள் நோக்கம் இருக்கே.. செய்தியாளர்களிடம் காட்டம்!

சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ ஆவேசம் அடைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் செய்தியாளர்களிடம் ஆவேசம் அடைந்த வைகோ-வீடியோ

    சென்னை: தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு வைகோ சற்று டென்ஷன் ஆகி விட்டார்.

    அன்று திமுக தரப்பில் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கானது 10 வருடமாக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சில தினங்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லி தீர்ப்பினையும் தந்தது.

    Vaiko angry on press people in Chennai

    இந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை கோர்ட்டில் வைகோ இன்று ஆஜரானார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பவும் வைகோ சற்று ஆவேசம் அடைந்தார். "இப்படி என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது" என்றார்.

    பின்னர் பதிலளித்து பேசும்போது, "மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்று கொள்வேன். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் அதையும் ஏற்றுக்கொள்வேன். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது.

    2 வருடத்தில்.. 59 பிஞ்சுகள்.. மிட்டாய் வாங்க வந்த சிறுமிகளை நாசம் செய்த பெட்டிக்கடைக்காரர்! 2 வருடத்தில்.. 59 பிஞ்சுகள்.. மிட்டாய் வாங்க வந்த சிறுமிகளை நாசம் செய்த பெட்டிக்கடைக்காரர்!

    அதேபோல, தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என்பது கண்டிக்கத்தக்கது. இந்நிலையே தொடர்ந்தால், எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலைதான் ஏற்படும். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றார் வைகோ.

    English summary
    MDMK President Vaiko got tension on press People after questioned about the verdict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X