சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு!

Google Oneindia Tamil News

சென்னை: தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலளார் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்த குணாஜோதிபாசுகம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்த குணாஜோதிபாசு

தீர்ப்பை நிறுத்தி உத்தரவு

தீர்ப்பை நிறுத்தி உத்தரவு

மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு

தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை

சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை

தனக்கு எதிரான தீர்ப்பு சட்டவிரோதமானது என மனுவில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதாகவும் வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் விசாரணை

அடுத்த வாரம் விசாரணை

மேலும் தனக்கு எதிராக குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சி இல்லாத நிலையில் தனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார். வைகோவின் மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
MDMK general secretary Vaiko has appealed in Chennai high court against the one year imprisonment in the case of treason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X