சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிக்கு கிடைத்த வெற்றி.. ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு வைகோ, பாலகிருஷ்ணன் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கிடைத்த வெற்றி" என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2018 மே 22 முன்பே ஆலைக்கு அரசு சீல் வைத்து இருந்தால் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Recommended Video

    Sterlite ஆலையை மீண்டும் திறக்க கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வேதாந்தா குழுமத்தின் ஆலையான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சிவஞானம் அவர்களும், நீதியரசி பவானி சுப்புராயன் அவர்களும் வழங்கியுள்ள தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மகக்ள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    Vaiko, Balakrishnan welcome to Sterlite plant verdict

    அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, 13 உயிர்கள் பலியாயிற்றே.. அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த நீதி என்றே கருதுகிறேன். கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இடைவிடாமல் போராடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

    என்னவெல்லாம் நடக்குமோ.. அமெரிக்காவில் பதிவான வெப்பநிலை.. உலகிலேயே இதுதான் மிக அதிகம்.. செம ஹீட்!என்னவெல்லாம் நடக்குமோ.. அமெரிக்காவில் பதிவான வெப்பநிலை.. உலகிலேயே இதுதான் மிக அதிகம்.. செம ஹீட்!

    ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை பாழ்படுத்தி வருகிறது எனபதையே தீர்ப்பு உறுதி செய்கிறது என ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். 2018 மே 22 முன்பே ஆலைக்கு அரசு சீல் வைத்து இருந்தால் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள் என்று கூறிய பாலகிருஷ்ணன், ஆலையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையே வழக்கு என்றும் கூறினார்.

    English summary
    "The High Court's decision not to open the Sterlite plant is a victory for justice. Victory for the victims of the shooting, ” said vaiko. Marxist Secretary secretary general.of State K. Balakrishnan said that no one would have fallen victim if the government had sealed the plant before May 22, 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X