சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் வெற்றியை கண்டு ஒரு கண்ணில் இன்ப கண்ணீரும், அதை பார்க்க கருணாநிதி இல்லையே என்ற ஏக்கத்தில் மறு கண்ணில் துன்ப கண்ணீரும் வழிவதாக மதிமுக பொதுச்செயளாலர் வைகோ உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழாவும் திமுக கூட்டணியின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்த விழாவில் வீரமணி, கே எஸ் அழகிரி, வைகோ, கே பாலகிருஷ்ணன், திருமாவளவன், பாரிவேந்தர், ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைவர்

தலைவர்

அப்போது அந்த கூட்டத்தில் வைகோ பேசினார். அவர் கூறுகையில் திராவிடக் கட்சிகளோடு மோதி பாஜகவின் மூக்கு உடைப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்கள் மீண்டும் தாக்குவதற்கு தந்திரமாக நரித்தனத்துடன் நுழைவார்கள் என்பதை எண்ணி பார்த்து அதை தடுக்கும் ஆற்றல் மிகு தலைவர் இருக்கிறார்.

திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. கட்சி இப்தார் விருந்தை புறக்கணித்த 'ஷாக்' எடப்பாடி!திமுக வலையில் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. கட்சி இப்தார் விருந்தை புறக்கணித்த 'ஷாக்' எடப்பாடி!

ஈர்க்கும் அளவு

ஈர்க்கும் அளவு

ஸ்டாலின் வெற்றியை கண்டு ஒரு கண்ணில் இன்ப கண்ணீரும், அதை பார்க்க கருணாநிதி இல்லையே என்ற ஏக்கத்தில் மறு கண்ணில் துன்ப கண்ணீரும் வழிகிறது. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் அகில இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு சென்றுவிட்டார்.

இறுதி வரை

இறுதி வரை

இனி என் எஞ்சிய வாழ்வில் திமுகவுடன் இணைந்துதான் பயணிப்பேன். மாநில சுயாட்சி கொள்கை, மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. காந்தி போல் உருவ பொம்மை செய்து அதை நெருப்பு வைத்து காலில் மிதித்து தாக்கிய சம்பவம் நடைபெற்றது. சாவக்கர் பிறந்தநாளில் பள்ளிகளுக்கு சென்று கூரிய கத்திகளை கொடுக்கிறார் இந்துமகா சபா தலைவி எதிரிகளை குத்திக் கிழிப்பதற்கு.

தமிழகம்

தமிழகம்

கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும், வந்தால் நன்றி, தண்ணீர் வரும் என்று ஏமாற்றுகிறீர்கள். தமிழகத்தை மேகதாது வழியாக அழிக்க நினைக்கிறார்கள். 19 மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. எந்த வகையில் இந்தியை கொண்டு வந்தாலும் தடுப்போம் என்று முடிவு எடுத்து எப்போது அறிவித்தாலும் சரி, கட்டளையிடுங்கள் களம் காண்போம் என்றார் வைகோ.

English summary
MDMK General Secretary Vaiko expresses his feelings about Karunanidhi's demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X