சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினை சந்தித்த வைகோவிடம் பிரதமர் மோடி குறித்து கேள்வி.. இரண்டு வார்த்தையில் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக 3 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெல்ல முடியும்.

vaiko met mk stalin in anna arivalayam chennai after announced rajya sabha mp candidate

இந்த சூழலில் திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. இதில் சண்முகம், வில்சன் மற்றும் வைகோ ஆகியோருக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த மூன்று பேரும் எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. வரும் 6ம் தேதி 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்ததார். அப்போது தனக்கு ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்,

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ,மதிமுக மாநிலங்களை ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு யோசனை பண்ணுவோம் என்று கூறிவிடடு சென்றார்.

English summary
mdmk leader vaiko met dmk leader mk stalin in anna arivalayam chennai after dmk announced rajya sabha mp candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X