சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி… வைகோ- வீடியோ

    சென்னை: லோக்சபாவும் வேண்டாம், ராஜ்யசபாவும் வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனம் வெதும்பி கட்சி பொதுக்குழுவில் பேசியுள்ளார்.

    திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் தங்களுக்கு 4 தொகுதிகளை விடாமல் கேட்டுவந்த மதிமுக, திமுக இதற்கு மறுப்பு தெரிவித்ததால் படிப்படியாக இறங்கி வந்தது பின்னர் குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது ஒதுக்குங்கள் என்று திமுகவிடம் கேட்டு வந்தது. இல்லையென்றால் கூட்டணியில் நீடிப்பது குறித்து யோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.

    திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி... வைகோ நம்பிக்கை திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி... வைகோ நம்பிக்கை

    சரிந்த வாக்கு சதவீதம்

    சரிந்த வாக்கு சதவீதம்

    தேசிய ஜனநாயக கூட்டணியோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டு சேர்ந்த வைகோ 7 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் டெப்பாசிட்டை பறிகொடுத்தார். வாக்கு சதவீதமும் 3.5% ஆக குறைந்தது.

    சட்டசபைத் தேர்தலில்

    சட்டசபைத் தேர்தலில்

    அடுத்து வந்த சட்டமன்ற தேர்தல் வைகோவுக்கு இன்னும் சோதனையாக அமைந்தது. 29 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 27 இடங்களில் டெப்பாசிட்டை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டதோடு வாக்கு சதவீதம் 0.86% என்ற அதல பாதாள நிலைக்கு சென்றுவிட்டது. இதையெல்லாம் குறிப்பிட்டு பேசிய திமுக சீனியர்களும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் மதிமுகவுக்கு இரண்டு சீட்டுகள் கொடுக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர்.

    ராஜ்யசபா சீட்

    ராஜ்யசபா சீட்

    ஆகவே மக்களவை தேர்தலுக்கு ஒரு தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கி வைகோவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்குவது என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளது இதை அப்போதே ஒன் இந்தியா தமிழ் கூறியிருந்தது (https://tamil.oneindia.com/news/chennai/does-mdmk-reserve-two-seats-questioned-dmk-seniors-342710.html)

    கட்டாயம்

    கட்டாயம்

    இந்த நிலையில் தற்போது லோக்சபா ஒரு தொகுதியும் ராஜ்யசபாவில் ஒரு இடமும் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மதிமுக தேர்தலில் போட்டியிடும்போது உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடவேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதனால் வைகோ வருத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

     பொதுக்குழுக் கூட்டம்

    பொதுக்குழுக் கூட்டம்

    இந்நிலையில் மதிமுகவின் 27 வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. முதலில் புத்தக வெளியீடுகள் நடைபெற்றது பின்னர் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வைகோவின் ராஜதந்திரத்தை? புகழ்ந்து பேசினர். அதாவது தேர்தலில் வைகோ போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பதற்கு பல கார்பரேட் கம்பெனிகள் காத்திருக்கின்றன. ஆகவேதான் இம்முறை எப்படியும் நாடாளுமன்றத்திற்கு அண்ணனை அனுப்பி வைப்பபது என்ற முடிவில்தான் கட்சியும் இப்படிஒரு முடிவை எடுத்துள்ளது என்றெல்லாம் பேசியுள்ளனர்.

    மன வருத்தம்

    மன வருத்தம்

    அதன் பிறகு மைக்கை பிடித்த வைகோ கட்சியின் ஆரம்பகால நிலை, கட்சி பயணித்து வந்த அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டவர் பின்னர் ஸ்டாலின் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கூறியுள்ளார். பின்னர் நமது கட்சியினர் இதுவரை எந்த கூட்டணி கட்சிகளிடமும் சென்று பணம் வாங்கியதில்லை. அந்தப் பெயரை எனக்கு வாங்கி கொடுத்துள்ளீர்கள். இனி வரும் தேர்தலிலும் அதே பெயரை தக்க வைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கட்சியினருக்கு அட்வைஸ் செய்தார்.

    பெரியார் போல இருக்க ஆசை

    பெரியார் போல இருக்க ஆசை

    அதன் பின்னர் என்ன நினைத்தாரோ என்னவோ இந்த லோக்சபா ராஜ்யசபா எதுவும் வேண்டாம், பெரியார் போல தொண்டு மட்டும் செய்துகொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கூறினார். இதைக் கேட்டதும் கீழிருந்த தொண்டர்கள் நீங்க நாடாளுமன்றத்திற்கு சென்றே ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தனர். வைகோ திடீரென்று இப்படி பேசியது தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    MDMK chief Vaiko has aired his ire on DMK's allotment of just one seat to his party in the Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X