சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயமா? தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு- வைகோ

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகம் நாசமாகிவிடும்..! வைகோ வேதனை...

    சென்னை: நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மத்திய பாஜக அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:

    பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நேற்று (10.07.2019) நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் ஏற்படுத்தும் சட்டத் திருத்த மசோதா கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் என்று மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் 2016 டிசம்பரில் கருத்துக் கூறியபோதே அதனைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டேன்.

    மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 இல் திருத்தம் செய்து, புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது.

    முதல் நாளே.. காலையிலேயே.. சிரித்த முகத்துடன் வந்த ஏசி சண்முகம்.. வேலூரில் வேட்பு மனுதாக்கல் முதல் நாளே.. காலையிலேயே.. சிரித்த முகத்துடன் வந்த ஏசி சண்முகம்.. வேலூரில் வேட்பு மனுதாக்கல்

    நடுவர் மன்றம்

    நடுவர் மன்றம்

    இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா ஆகிய நதிநீர் பிரச்சினைகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு 50 ஆண்டு காலம் ஆகின்றன.

    தமிழகத்துக்கு காவிரி நீர் இல்லை

    தமிழகத்துக்கு காவிரி நீர் இல்லை

    ரவி, பியாஸ் நடுவர் மன்றம் 33 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் 29 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை இன்று வரை தீர்க்க முடியவில்லை.

    ஒரே தீர்ப்பாயம் உதவாது

    ஒரே தீர்ப்பாயம் உதவாது

    இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பு தனித் தனி நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டும், நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைளுக்கு சுமூகத் தீர்வு ஏற்படவில்லை. நடைமுறையில் உள்ள இந்தச் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது.

    மத்திய அரசின் நடவடிக்கை

    மத்திய அரசின் நடவடிக்கை

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் சட்டப்படியும், நியாயப்படியும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேலாண்மை ஆணையம் என்று பெயருக்கு ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆனால் இந்த ஆணையத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிற அதிகாரம் இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறோம். இந்நிலையில், மத்திய அரசின் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு இன்னும் பல ஆண்டுகளுக்கு நதி நீர் பிரச்சினையை நீடிக்கவே வழி செய்யும்.

    தமிழகம்தான் பாதிக்கபப்டும்

    தமிழகம்தான் பாதிக்கபப்டும்

    இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடுதான் என்பதை உணர்ந்து, தமிழக அரசு இந்தச் சட்ட முன் வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு நதி நீர் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

    English summary
    MDMK General Secretary vaiko has rejected the Centre's move to single tribunal to hear water disputes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X