சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு ஒரு வாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எம்.பி வைகோ, அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எம்.பி வைகோ, அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறது. இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் உட்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதேபோல் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மதிமுக நிறுவனர் வைகோ அஞ்சலி செலுத்தினார்;. நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்திய பின் எம்.பி வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

காஷ்மீர் பிரச்சனை முடிந்தது.. அடுத்து அயோத்தி.. அதிரடிக்கு தயாராகும் அமித் ஷா.. இதுதான் திட்டம்? காஷ்மீர் பிரச்சனை முடிந்தது.. அடுத்து அயோத்தி.. அதிரடிக்கு தயாராகும் அமித் ஷா.. இதுதான் திட்டம்?

என்ன பேட்டி

என்ன பேட்டி

அவர் தனது பேட்டியில், பெரியாரின் அலுவலகத்தில் வளர்ந்து, அண்ணாவின் இளவலாக அவருடன் வளர்ந்து, பராசக்தி முதல் திரும்பி பார் வரை பல்வேறு திரைப்படங்களின் மூலம் கோடிக்கணக்கான மக்களை திராவிட இயக்கத்தை நோக்கி திருப்பியவர் கருணாநிதி.

வைகோ பேச்சு

வைகோ பேச்சு

அவர்தான் எம்ஜிஆரை அரசியலுக்கு கொண்டு வந்தவர். திமுகவை அண்ணாவின் பார்வையில் கட்டிக்காத்து, வளர்த்து, அண்ணா மறைந்த பின்பும் திமுகவை வலுவாக்கியவர். திமுகவை எஃகு கோட்டையாக்கி காத்தவர் கருணாநிதி.

எங்கே

எங்கே

நெருக்கடி நிலையிலும் கூட கட்சியை மிகவும் வலுவாக கட்டிக்காத்தவர். பல போராட்டங்களுக்கு இடையிலும் கட்சியை வளர்த்து எடுத்தவர். துண்டு பிரசுரம் கொடுத்து கூட இவர் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.அண்ணாவிடம் இவர் படித்த அரசியல் பாடம் மிக சிறப்பானது. இந்தியாவிற்கே வழிகாட்டிய தலைவர். தமிழ் மொழி செம்மொழி ஆக காரணமாக இருந்தவர். அவர் மறைந்து ஒருவருடம் ஆகிறது.

எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

அவர் இறக்கும் முன் என்னை பார்த்ததும், அவரின் கண்கள் பணித்தது.கோடிக்கணக்கான இதயங்களை திமுகவை நோக்கி இழுத்தவர் கருணாநிதி. கருணாநிதிக்கு நான் எப்படி துணையாக பலமாக நின்றேனோ, அப்படித்தான் நான் ஸ்டாலினுக்கும் நிற்பேன். கருணாநிதிக்கு நான் இந்த வாக்கை கொடுத்து இருக்கிறேன். அவர் இறக்கும் முன் அவருக்கு இந்த வாக்கை கொடுத்தேன். அதை எப்போதும் காப்பாற்றுவேன்.

என்ன வாக்கு

என்ன வாக்கு

காஷ்மீர் பிரச்சனை மட்டுமின்றி பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் ஒற்றுமைக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் திமுக மிக முக்கியமான அரசியல் கட்சியாக உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் நாங்களும், மதிமுகவினரும் திமுகவை உறுதியாக கட்டிக்காக்கும் படைத் தளபதியாக செயல்படுவோம், என்று வைகோ குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
MDMK MP Vaiko paid tribute to Karunanidhi on his death anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X