சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு

வரும் 5-ம் தேதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய வைகோ திட்டமிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko : ராஜ்யசபாவுக்கு செல்ல வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல்-வீடியோ

    சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீக்கிரமாகவே ராஜ்ய சபா சென்றுவிடுவார் என்று பார்த்தால், ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

    லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த சீட் மதிமுகவுக்கு தரப்படவில்லை என்றதுமே, வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக உறுதி அளித்திருந்தது.

    அதன்படி வைகோ எம்பியாக போகிறார் என்றும், 23 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ராஜ்ய சபாவில் முழங்க போகிறார் என்றும் தொண்டர்கள் ஆர்வமானார்கள்.

    தேச துரோக வழக்கு

    தேச துரோக வழக்கு

    ஆனால், 2009-ல் "குற்றம் சாட்டுகிறேன்" என்கிற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக திமுக ஆட்சி காலத்தில் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இது சம்பந்தமான விசாரணையும் இவ்வளவு நாள் நடந்து கொண்டு இருந்தது. இதில் வருகிற ஜூலை 5- ந்தேதி தீர்ப்பும் வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பு வைகோவுக்கு சாதகமாக இருக்குமா, பாதகமாக இருக்குமா என்பதை பொறுத்துதான், ராஜ்ய சபாவுக்கு வைகோ போவது முடிவாகும் போல இருக்கிறது.

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    தீர்ப்பு 5-ம் தேதி என்றால், ராஜ்ய சபா வேட்ப தாக்கல் செய்ய வரும் 8-ம் தேதி டைம் உ ள்ளது. அதனால் தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் 5-ம் தேதிக்கு பிறகு வைகோ வேட்புமனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எப்படியும், தீர்ப்பு சாதமாகவே வரும் என்றும் வைகோ ராஜ்ய சபாவுக்கு செல்வார் என்றும் மதிமுக தரப்பினர் அதிகபட்சமாகவே எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஒருவேளை பாதகமாக வந்தால், அதை எப்படி வைகோ உள்ளிட்டவர்கள் எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வைகோ ராஜ்யசபாவுக்குச் செல்ல வேண்டும்.. தமிழக நலன்களுக்காக முழங்க வேண்டும்.. நாடாளுமன்றத்தை தனது வாதத் திறமையால்கிடுகிடுக்க வைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

    English summary
    Sources say that, MDMK General Secreatary Vaiko will file the Nomination on after July 5th for Rajya Sabha election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X