சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதிமுகவுக்கு 2 சீட் ஒதுக்கீடு.. பரபரத்த பிரேக்கிங் செய்தி.. மறுத்த வைகோ.. அறிவாலயத்தில் ஒரே பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மதிமுகவுக்கு 2 சீட், திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்- வீடியோ

    சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப் பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதை மறுத்துள்ளார்.

    திமுக மற்றும் அதிமுக நடுவே தொகுதி பங்கீட்டுக் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்காக அறிவாலயத்திற்கு வைகோ நேரடியாக வருகை தந்திருந்தார்.

    அப்போது, இரு கட்சிகள் நடுவே ஒப்பந்தத்திற்கு கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கு தலா இரண்டு லோக்சபா தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

    என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே! என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே!

    காங்கிரசுக்கு 10

    காங்கிரசுக்கு 10

    கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் கையெழுத்தாகவில்லை. முன்னதாக கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு, ஒரு தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு, 10 தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    21 தொகுதி இடைத் தேர்தல்

    21 தொகுதி இடைத் தேர்தல்

    இதனிடையே அறிவாலயத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ கூறியதாவது: லோக்சபா தேர்தல் மற்றும், ஒருவேளை அந்த தொகுதிகளோடு சேர்ந்து 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றால் அந்த கூட்டணியில் திமுக, மதிமுக இடம் பெற்றுள்ளது.

    குழு வரவில்லையாம்

    குழு வரவில்லையாம்

    மதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் இன்று அறிவாலயம் வர முடியவில்லை. எனவே நாளை அவர்கள் வருவார்கள். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

    திடீர் பரபரப்பு

    திடீர் பரபரப்பு

    இதனிடையே மதிமுகவுக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் ஊடகங்களுக்கு திமுக தரப்பிலிருந்து சிலரால் கசியவிடப்பட்டது. இதையடுத்து பிரேக்கிங் செய்திகள் ஊடகங்களில் வெளியானது. ஆனால், தொகுதி பங்கீடு முடிவாகவில்லை என வைகோ கூறியதால் அந்த பரபரப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்ககப்பட்டுள்ளதாக செய்தியை கசியவிட்டு வைகோவை கப்சிப் ஆக்குவதற்கு திமுக தரப்பில் சிலர் திட்டமிட்டதாகவும், ஆனால், 3 தொகுதிகளுக்கு குறைந்து ஏற்க முடியாது என வைகோ பிடிவாதம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Vaiko's mdmk party in DMK alliance for the upcoming Lok Sabha elections. The final settlement will be seal on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X