சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவை 70 சதவீதம் லெஃப்ட், ரைட், செண்டர் என தாக்கி பேசினேன்.. ஆனால் காங்கிரஸை.. வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என மறைந்த பிரதமர் வாஜ்பாய் எங்களிடம் சொல்லவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை கடந்த வாரம் மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது.

இது சட்ட விரோதம்.. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உமர் அப்துல்லா கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு இது சட்ட விரோதம்.. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உமர் அப்துல்லா கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

லெப்ட் ரைட்

லெப்ட் ரைட்

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைகோ கடும் கேள்விக் கணைகளை தொடுத்துவிட்டார். அப்போது காங்கிரஸ் குறித்தும் லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்.

வசைப்பாடுதல்

வசைப்பாடுதல்

இந்த நிலையில் மோடியோ காஷ்மீர் பிரச்சினையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து வைகோ கூறுகையில் என்னை யார் வசைப்பாடினாலும் கவலையில்லை.

நிறைவேற்றி

நிறைவேற்றி

காங்கிரசை விட பாஜகவை தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன். காஷ்மீரில் பிரச்சினையில் வாஜ்பாய் கனவை நிறைவேற்றி விட்டோம் என பிரதமர் மோடி கூறுவது தவறு.

காஷ்மீர்

காஷ்மீர்

370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வாஜ்யபாய் எங்களிடம் சொல்லவில்லை. பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நேரு நிறைவேற்றவில்லை. என்னுடைய பேச்சில் நான் 30 சதவீதம்தான் காங்கிரஸை தாக்கி பேசியுள்ளேந். 70 சதவீதம் பாஜகவை லெஃப்ட் , ரைட், செண்டர் என தாக்கி பேசியுள்ளேன். பாஜக நெருப்போடு விளையாடுவதாக சொன்னேன். இந்தியா துண்டு துண்டாக போகும் என்று சொன்னேன் என்றார் வைகோ.

English summary
MDMK General Secretary Vaiko says that he doesnt matter about other criticism
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X