சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: கோதாவரியிலிருந்து காவிரி நீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராக போய்விடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக அரசு தலைமையிலான அரசு கடந்த 30-ஆம் தேதி பொறுப்பேற்றது. இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

Vaiko says that no cauvery will come from Godaveri

இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். அவர் கூறுகையில் கோதாவரி- காவிரி இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், கோதாவரியிலிருந்து காவிரி நீர் வரும் என்பதெல்லாம் கானல் நீராக போய்விடும். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம் இயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்

இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 274 மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்துள்ளது வேதனையை தருகிறது. மேலும் உயிர் பலியை தடுக்க தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என வைகோ தெரிவித்திருந்தார்.

English summary
Vaiko says that no cauvery will come from Godaveri. It will be like Mirage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X