சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.. வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது என மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழுக்கு வைகோ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பல்வேறு துறைகளில் திறமை கொண்டவர்களை முன்னர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆனால் தற்போது இந்தி மொழியால் நாடாளுமன்ற விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.

Vaiko slams PM Modi for speaking in Hindi at Parliament

இந்தியில் முழக்கங்களை எழுப்புகின்றனர். பிரதமர் கூட இந்தி மொழியில்தான் பேசுகிறார். வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் போன்றோர்கள் ஆங்கிலத்தான் பேசினார்கள்.. அதற்காக அவர்கள் இந்தி மொழி தெரியாதவர்கள் என்றா சொல்கிறோம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் என அனைவருமே நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தான் உரையாற்றினார்கள்.

ஆனால் இந்தி-இந்து-இந்துராஷ்டிரா என்பதை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசுகிறார். மிகப் பெரிய ஜனநாயகவாதியான நேரு நாடாளுமன்ற கூட்டங்களை ஒருபோதும் தவிர்த்தது இல்லை.

சேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்!சேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்!

ஆனால் பிரதமர் மோடியோ எப்போதாவது நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வருகிறார். அனைத்திலுமே இந்தியை திணித்து வருகின்றனர். அதனால்தான் அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
Mdmk General Secretary Vaiko said that the standard of parliament debates has come down because of Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X