சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு- ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வைகோ போட்டியிடுவதில் சிக்கல் இல்லை?

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறை தண்டனை நிறுத்தி வைப்பு- எம்.பி. பதவிக்கு வைகோ போட்டியிடுவதில் சிக்கல் இல்லை?- வீடியோ

    சென்னை; தேசதுரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

    2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இவ்வழக்கு போடப்ப்பட்டது.

    Vaiko to contest in RS Poll?

    இதை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி விசாரித்து இன்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ10,000 அபராதமும் விதிப்பதாக அவர் தீர்ப்பளித்தார்.

    வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அவர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஏனெனில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 6 ஆண்டுகாலத்துக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பது சட்டம்.

    இருப்பினும் வைகோ தரப்பின் கோரிக்கையை ஏற்று அவருக்கான சிறை தண்டனை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் வைகோ போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.

    இந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ.? தேசதுரோக வழக்கு கடந்து வந்த பாதை இந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ.? தேசதுரோக வழக்கு கடந்து வந்த பாதை

    வைகோ மீது ஏராளமான அரசியல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பொடா சட்டத்தில் விசாரணை கைதியாகவும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். ஆனால் வைகோ மீதான வழக்கில் முதல் முறையாக தண்டனை நிரூபிக்கப்பட்ட தீர்ப்பு தற்போதுதான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    MDMK General Secretary Vaiko has been sentenced to a one year jail term and fined Rs 10,000 by a Chennai Court in a 2009 seditious speech case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X