சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று இரவு சந்தித்து பேசினார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

Vaiko today met DMK president MK Stalin

சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் வைகோ அளித்த பேட்டி: மோசடியான வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால்தான் உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு சில தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக வருகை தந்தேன்.

ஜார்கண்ட் 4வது கட்ட சட்டசபை தேர்தல்.. 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்ஜார்கண்ட் 4வது கட்ட சட்டசபை தேர்தல்.. 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்

இன்றைய அரசியலில் வடகிழக்கு மாகாணங்கள் தீப்பிடித்து எரிகின்றன. டெல்லியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வருவது பாவச் செயல் என்ற அணுகுமுறையை எடுத்து அதன்மூலம் அவர்கள் திட்டத்தை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள்.

காஷ்மீரில் தனி அந்தஸ்து நீக்குவது என்ற மாபெரும் கொடுமையைச் செய்தார்கள். இஸ்லாமியர் அல்லாதவர் இந்தியாவிற்குள் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசத்தில் இருந்து வர முடியும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது. இது மிகவும் அநீதியானது, எனவேதான் குடியுரிமை திருத்த சட்டம் வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

English summary
MDMK General Secretary Vaiko today met DMK president MK Stalin at Anna Arivalayam in Chennai later told reporters that they both were discussed about Tamilnadu local body elections and the citizenship Amendment Bill which was passed recently by the union government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X