சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில், தமிழகம் இணையக் கூடாது: வைகோ

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : One Country one ration card

    சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணைய கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வைகோ கூறியதாவது:

    ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளோம்; அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்' என்று மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    நேற்று டெல்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 'இதுவரை 14 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர ஆயத்தமாக உள்ளன; டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வரும்' என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆதார் இணைப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், அது சரிசெய்யப்பட்டவுடன், 'ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் தமிழ்நாடும் இணைக்கப்பட்டுவிடும் என்றும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.

    பாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லை.. தேசியத் தலைவராக்கினால் கூட ரஜினி ஏற்க மாட்டார்.. திருநாவுக்கரசர்பாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லை.. தேசியத் தலைவராக்கினால் கூட ரஜினி ஏற்க மாட்டார்.. திருநாவுக்கரசர்

    வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள்

    வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள்

    இந்தியாவிலேயே பொதுப்பகிர்வு முறை (ரேசன்) சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலம் தமிழ்நாடு என்று கூறி இருக்கின்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொதுப்பகிர்வுத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார். அதாவது, ‘பெயர் அளவுக்குக்கூட இந்தத் திட்டத்தை எதிர்க்காமல், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய பாஜக அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே, அவரது கருத்து எதிரொலிக்கின்றது.

    பொதுப் பகிர்வு முறை சீர்குலைவு

    பொதுப் பகிர்வு முறை சீர்குலைவு

    இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுப்பகிர்வு முறையைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வரும் மக்களை ஊக்குவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றுவதற்காகவும்தான், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பகிர்வு முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று, பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.

    தமிழகத்துக்கு பாதிப்பு

    தமிழகத்துக்கு பாதிப்பு

    இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். பொதுப்பகிர்வு முறை என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    தமிழகம் இணைய கூடாது

    தமிழகம் இணைய கூடாது

    இந்நிலையில், மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒரே; ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தமிழக பொதுப்பகிர்வு முறை சீர்குலைந்து விடும். எனவே, ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    MDMK General Secretary Vaiko has urged that Tamilnadu govt should not join the Centr'es One nation one Ration plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X