நானும் போட்டுக் கொண்டேன்.. அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுங்க.. வைரமுத்து வேண்டுகோள்
சென்னை: தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

நேற்று...
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.
அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.

ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.
ஆகவே...
மாண்புமிகு மக்களே!
நீங்களும்...
#CoronaVaccine
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.