Just In
வால்காவோடு வைகையை இணைத்த தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி... வைரமுத்து புகழஞ்சலி
சென்னை: ரஷ்யாவின் வால்கா நதியோடு தமிழ்நாட்டின் வைகையை இணைத்தவர் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்ப் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்.

அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கல்:
ரஷ்யத் தமிழறிஞர்
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
மாஸ்கோவில் மறைவுற்றார்.
வால்காவோடு வைகையை
இணைத்தவருக்கு
எங்கள் புகழ் வணக்கம்.


இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு.
செய்தால்தான் துப்யான்ஸ்கியின்
உயிர் ஓய்வுறும்.
யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும்
உறுபொருளும் உண்டு.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.