சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேருவை பிடிக்குமோ பிடிக்காதோ.. அவரது வாக்குறுதி பிடிக்காமல் இருக்கக் கூடாது- வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: நேருவை பிடிக்குமோ பிடிக்காதோ ஆனால் அவரது வாக்குறுதி பிடிக்காமல் இருக்கக் கூடாது என வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Vairamuthu opposes Hindi imposition in education

இதன்படி மும்மொழி கொள்கை, அதாவது இந்தி மொழியும் 3-ஆவது மொழியாக திணிக்கப்படுவதாகும். அதாவது 8-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்பதுதான் இந்த புதிய கொள்கையின் வரைவு அறிக்கையாகும். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் டாப்.. #StopHindiImpositionஇந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் டாப்.. #StopHindiImposition

இதுதொடர்பாக இந்த குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் #stophindiimposition என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. இதுதொடர்பாக வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி. மத்திய அரசுக்கு நேருவைப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது.
நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் ஏற்கெனவே ரயில் நிலையங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் வலுப்பெற்றது.

English summary
Vairamuthu tweets against Hindi imposition in New Education policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X