சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐநா சபையில் தமிழ்.. பேரானந்தம் பிரதமரே.. இதையும் செய்தால் நன்றி உரைப்போம்.. வைரமுத்து ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: ஐநா சபையில் தமிழை மேற்கோள்காட்டி கூறியதற்கு பேரானந்தம் பிரதமரே என கவிஞர் வைரமுத்து பாராட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74-ஆவது பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகின் பழமையான மொழியான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருக்கிறார் என்றார் பிரதமர்.

சுஷ்மா ஸ்வராஜின் வியப்பளிக்கும் கடைசி ஆசை.. கடமை தவறாது நிறைவேற்றினார் மகள்சுஷ்மா ஸ்வராஜின் வியப்பளிக்கும் கடைசி ஆசை.. கடமை தவறாது நிறைவேற்றினார் மகள்

விளக்கம்

விளக்கம்

இதன் அர்த்தத்தையும் தெளிவாக விளக்கி சொன்ன மோடி, நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உணர்வு இந்தியாவுக்கு தனித்துவமானது என்றார்.

மாநாட்டில்

மாநாட்டில்

அத்துடன் 125 ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த ஆன்மீக குருவான சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டின்போது, இந்த செய்தியை உலகுக்கு வழங்கினார்.

உலகிற்கு அளிக்கும் செய்தி

உலகிற்கு அளிக்கும் செய்தி

அந்த செய்தி இதுதான், "நல்லிணக்கமும் அமைதியும்தான் தேவை. மற்றும் கருத்தும் வேறுபாடுகளும் இல்லை ". இன்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சார்பாக நானும் அதையே கூறுகிறேன். "நல்லிணக்கமும் அமைதியும்" மட்டுமே நாங்கள் உலகிற்கு அளிக்கும் செய்தி என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

நன்றி உரைப்போம்

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில் ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள்
பேரானந்தம் பிரதமர் அவர்களே.
தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால்
நன்றி உரைப்போம் நாங்களே என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

English summary
Vairamuthu praises PM Narendra Modi in his tweet about his Tamil speech in UNGA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X