சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    சென்னை: சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து விஞ்ஞானிகளுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ 978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.

     Vairamuthu praises Scientist for launching of Chandrayaan 2

    அதன்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன்கள் கொடுக்கப்பட்டன.

    எனினும் கிரையோஜெனிங் எரிப்பொருள் கோளாறால் விண்கலத்தை செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இன்று சந்திரயான் 2 விண்கலத்தை செலுத்துவதற்காக நேற்றைய தினமே கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது.

     Vairamuthu praises Scientist for launching of Chandrayaan 2

    இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்துள்ளதால் இந்தியர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கூறுகையில் 130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. "வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை". இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது என பாராட்டியுள்ளார்.

    English summary
    Lyricist Vairamuthu praises Scientist for launching of Chandrayaan 2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X