குற்றப்பரம்பரை கூட்டத்தைக் கொற்றப் பரம்பரை என விடுதலை பெற்று தந்த தேவர் திருமகனார்... வைரமுத்து
சென்னை: குற்றப்பரம்பரை கூட்டத்தைக் கொற்றப் பரம்பரை என விடுதலை பெற்று தந்த தேவர் திருமகனார் என்று கவிப்பேரரசர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

குற்றப்பரம்பரை என்று
குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக்
கொற்றப்பரம்பரை என்று
முற்றும் விடுதலை பெற்றுத்தந்த
வெற்றித் தலைவர் தேவர் திருமகனார்.
அவர் பிறந்த மண்ணைக்
கசிந்த கண்ணோடும்
கனத்த நெஞ்சோடும்
கைகூப்பித் தொழுகிறேன்.
இவ்வாறு வைரமுத்து எழுதியுள்ளார்.