சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.. வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை - வைரமுத்து விளக்கம்- வீடியோ

    சென்னை: என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

    #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களும் பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பாடகி சின்மயியும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்ற போது தன்னிடம் கவிஞர் வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என குற்றம்சாட்டியிருந்தார்.

    வைரமுத்து கடந்த 10-ஆம் தேதி அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று தெரிவித்திருந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    எனினும் அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சின்மயியோ வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்கவே இல்லை. இந்நிலையில் வைரமுத்து தாமாக முன் வந்து வீடியோ மூலம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    [சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்- வைரமுத்துவை விமர்சித்து தமிழிசை டுவீட்! ]

    தொடரட்டும்

    தொடரட்டும்

    அதில் அவர் தோன்றி பேசுகையில் என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. முற்றிஉள்நோக்கம் கொண்டது. அது உண்மையாக இருந்தால் சம்பவந்தப்பட்டவர் வழக்கு தொடரட்டும்.

    அசைக்க முடியாத ஆதாரம்

    சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.

    நீதிக்கு தலை வணங்குகிறேன்

    நீதிக்கு தலை வணங்குகிறேன்

    நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும், நீதிக்கு தலை வணங்குகிறேன் என்றார் வைரமுத்து.

    English summary
    Vairamuthu says that allegations made on him is motivated one. He is ready to face case against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X