சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடியில் கிடைத்தவை என்ன?.. வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு | Keeladi Agalvaraichi in Tamil

    சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய அரசின் துணையோடு மேலும் ஆய்வுகள் தொடர வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

    கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தமிழகத் தொல்லியல் துறை நேற்று முன் தினம் வெளியிட்டது. மதுரையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கும் தகவல்கள், பொருட்கள், 6 வகையான ஆக்ஸிலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

    Vairamuthu says that Kizhadi was found before Indus Valley civilisation

    இதன் மூலம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்குடி என்பது எத்தனை உண்மை என்பதை உணர செய்தது கீழடி அகழாய்வு முடிவுகள்.

    சிந்து சமவெளி நாகரிகம் என்பது தான் மிகப் பழமையான நாகரீகம். எனவே அது முதலாம் நகர நாகரீகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் கீழடி நாகரிகத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும்.
    #Keezhadi #கீழடி என தெரிவித்துள்ளார்.

    English summary
    Vairamuthu says that Kizhadi was found before Indus Valley civilisation. He asks more medias has to cover the excavation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X