சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக சட்டசபை மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது. இதற்கான ஒரு நடவடிக்கையாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கைகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

Vairamuthu urges TN Governor to approve 7.5% quota Bill

தமிழக சட்டசபையிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை ஒப்புதல் தராமல் உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதனிடையே 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அரசுப் பள்ளி மாணவர்க்கான
மருத்துவ இட ஒதுக்கீட்டில்
ஆளுநரின் முடிவுக்குத்
தமிழ்நாட்டு விளிம்புநிலை
மக்களின் விழிகள்
கண்ணீரோடும் கவலையோடும் காத்திருக்கின்றன.

ஆளுநரின் அதிகாரம்
அடித்தட்டு மக்களுக்கே
நன்மைதரும் என்று நம்புகிறேன்.

நீங்களும்
நம்பியிருங்கள்
தம்பி தங்கையரே!

இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

English summary
Vairamuthu has urged that the TN Governor should approve 7.5% quota Bill for Medical Admissions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X