• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வல்லரசுகளையே நடுங்க வைத்த கேங்.. வலிமையில் வினோத் எடுத்த பெரிய தீம்.. யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்?

Google Oneindia Tamil News

சென்னை: வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியான நிலையில் சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் என்றால் யார் என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. சாத்தான் ரைடர்கள் குறித்து பலரும் தீவிரமாக தேட தொடங்கி உள்ளனர். யார் இந்த சாத்தான் ரைடர்ஸ் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

"நீங்கள் கடைத்தெடுத்த விஷம் நாங்கள்.. சாத்தானின் அடிமைகள் நாங்கள்.. இருள் மலைதான் எங்கள் உலகு.. அதில் அத்துமீறி யாராவது கால் வைத்தால்... " அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று இந்த வரிகளோடு யூ டியூபில் வெளியாகி ஹிட் அடித்தது. மீண்டும் ஸ்டைலிஷ் அஜித், தரமான பிஜிஎம், நினைத்து பார்க்க முடியாத பைக் ஸ்டண்டுகள் என்று இப்போதே வலிமை படம் பிபியை எகிற வைத்து இருக்கிறது.

பொதுவாக ஹீரோ பேசும் வசனங்களை வைத்தே டீசர், டிரைலர் வெளியாவது வழக்கம். சில படங்களின் மட்டுமே டீசர், டிரைலர் வில்லனின் வசனத்தோடு தொடங்கும். வலிமை படத்தின் கிளிம்ப்ஸும் அதேபோல் வில்லனின் கோணத்தில்தான் கதையாக விரிகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த படத்தில் இவ்வளவு பைக் ஸ்டண்ட் வருகிறதே.. தீம்தான் என்ன?

 அடியா இல்ல இடியா.. யார் இந்த வெங்கடேஷ் ஐயர்? எம்பிஏ, சிஏ படிச்சிட்டு கிரிக்கெட் ஆடும் குட்டி கங்குலி அடியா இல்ல இடியா.. யார் இந்த வெங்கடேஷ் ஐயர்? எம்பிஏ, சிஏ படிச்சிட்டு கிரிக்கெட் ஆடும் குட்டி கங்குலி

சாத்தான் அடிமை

சாத்தான் அடிமை

நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள்.. சாத்தானின் அடிமைகள் நாங்கள் என்று வில்லன் கூறும் அந்த ஒன் லைன்தான் இந்த படத்தின் தீம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் எப்போதும் தனது படங்களுக்கு என்று வித்தியாசமான கதை களத்தை எடுப்பதில் எச். வினோத் வல்லவர். சின்ன சின்ன பெட்டி கிரைம் செய்திகளை வைத்தே சதுரங்க வேட்டையை வினோத் எடுத்தார். அதேபோல் பவாரியா கொள்ளை கூட்டத்தை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று 1 எடுத்தார். அப்படி ஒரு கிரைம் கேங்கை பற்றிய கதைதான் இந்த வலிமை.

யார் இவர்கள்?

யார் இவர்கள்?

சாத்தானின் அடிமைகள் என்று இந்த கிளிம்ப்ஸுல் சொல்லப்படுவது சர்வதேச அளவில் இருக்கும் சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்களை குறிப்பிட்டுதான். "சாத்தான் ஸ்லேவ்" அதாவது சாத்தானின் அடிமைகள் என்ற பெயரில் ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என்று பல நாடுகளில் இயங்கி வரும் பைக் ரைடர்களை பின்புலமாக கொண்ட கதைதான் இது என்கிறார்கள். அது என்ன பைக் ரைடர்களில் பெரிய சுவாரசியம் இருக்க போகிறது என்று நீங்கள் கேட்கலாம்.. இந்த பைக் ரைடர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு லடாக் டிரிப் போகும் வகையறா கிடையாது.. இவர்கள் ஹிட்லரின் அடிபொடிகளாக பார்க்கப்பட்ட.. பல கொலை கேஸ்களில் தேடப்பட்டு வந்த பைக்கர்ஸ் கேங்.

வலிமை கதை

வலிமை கதை

இங்கிலாந்தில் 1967ல் சாத்தான் ஸ்லேவ் எம்சி என்ற பைக்கர் கேங் உருவாக்கப்பட்டது. கருப்பு ஜாக்கெட்டில் பின்னாடி எலும்பு கூடு படம் போட்டு சாத்தான் ஸ்லேவ் என்று எழுதி இருப்பதுதான் இவர்களின் அடையாளம். ஹார்லி டேவிட்சன் வகை பைக்குகள், நீண்ட ஹேண்டில் பார் கொண்ட நீளமான பைக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கேங்தான் இது. தொடக்கத்தில் ஒரு கேங்தான் இருந்தது. அதன்பின் அதே பெயரில் பல நாடுகளில் பல கேங்குகள் உருவாக்கப்பட்டது. முக்கியமாக வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கேங்குகள் உருவாக்கப்பட்டது.

கேஸ்கள்

கேஸ்கள்

இதில் சில குழுக்கள் முழுக்க முழுக்க பைக் ரைடுகளை மட்டுமே செய்தாலும் பல குழுக்கள் கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று பல கிரைம் கேஸ்களில் சிக்கி இருக்கிறார்கள். முக்கியமாக நியூயார்க், லண்டனில் பல சாத்தான் ஸ்லேவ் குழுக்கள் பைக்குகளை வைத்து கொள்ளையில் ஈடுபடுவது, குழுவாக சேர்ந்து கொலை செய்வது, பெண்களை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்வது பல கேஸ்களில் சிக்கி இருக்கிறார்கள். சில பிரபல சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.

மோசமான பின்னணி

மோசமான பின்னணி

முக்கியமாக துப்பாக்கிகளை அதிக அளவில் வைத்துக்கொண்டு பைக்கில் சுற்றுவது, மோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே குற்றச்செயல்களில் ஈடுபடுவது, நெடுஞ்சாலையில் தனியாக செல்லும் கார்களை வழிமறித்து குழுவாக சேர்ந்து கொலை குற்றங்களை செய்வது எதிரி கேங் பைக்கர்களுடன் மோதி கொலைகளை செய்வது என்று நியூயார்க், லண்டன், உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர்கள் மீது கேஸ்கள் இருக்கின்றன. பல முக்கிய ரைடர்கள் 10, 20 வருடங்களாக சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போதை பொருள்

போதை பொருள்

அதிலும் சமீபத்திய போதை பொருள் கலாச்சாரம் இந்த கேங்கிற்கு இடையிலும் உள்ளது. போதை பொருள் விற்று இந்த குழுக்கள் பல இடங்களில் கைதாகி உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இவர்களை ஒடுக்க தனியாக போலீஸ் தனிப்படைகளை, சிறப்பு படைகளை அமைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது பல குழுக்கள் அடங்கிவிட்டாலும், இன்றும் சில மோசமான கொலைகார சாத்தான் ரைடர்கள் குழுக்கள் ஆக்டிவாகவே இருக்கிறது.

ஹிட்லர்

ஹிட்லர்

இந்த குழுக்கள் பலர் ஹிட்லரின் கருத்தை பின்பற்றக்கூடிய நாசிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாசி சிம்பிளை உடலில் டேட்டூவாக போட்டுக்கொள்வது, நாசிகளின் கையை உயர்ந்தும் சல்யூட் முறையை கடைபிடிப்பது என்று மிக மிக மோசமான குழுவாக இவர்கள் வலம் வந்துள்ளனர். ஜார்ஜ் ரிட்சி போன்ற சாத்தான் ஸ்லேவ் ரைடர் குழுவின் தலைவர்களை பல வருடமாக போலீசார் தேடி கைது செய்துள்ளனர். ஜார்ஜ் ரிட்சி என்பவர் பிரபல சாத்தான் ஸ்லேவ் ரைடர் குழு ஒன்றின் தலைவர் ஆவார். இவர் குழந்தைகளை வன்புணர்வு செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாடுகள்

பல நாடுகள்

பல நாடுகளில் இந்த பைக்கர் குழு இதே பெயரிலும் அல்லது நாட்டாரியஸ் கேங், ஏஞ்சல்ஸ் கேங் என்பது போன்ற வேறு வேறு பெயரிலும் இந்த குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் சில குழுக்கள் சாதராண பைக் ரைடர்களாக மட்டுமே வலம் வரும் நிலையில் பலர் சர்வதேச நாடுகள் தேடும் கிரிமினல்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கேங்கை மையமாக வைத்தே வலிமை படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.டார்க் வெப், பைக் ரைடர்ஸ் செய்த கிரைமைகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

English summary
Valimai Glimpse: What is the story behind Satan Slave Gang in the Ajith movie directed by Vinoth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X