சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கை மீறி வேன் டிரைவர் ஒருவர் தனது வேனை எடுத்துக் கொண்டு சாலையில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த கன்றுகுட்டி மீது மோதியதால் அது சம்பவ இடத்திலேயே பலியானது.

கொரோனா தாக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

Van hits calf near Ponnamallee Road leds the young one death

இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி கல்லறை பஸ் நிறுத்தத்தில் ஊரடங்கை மீறி வேகமாக வேனை ஓட்டி வந்த நபர் சாலையில் நின்று கொண்டிருந்த கன்றுகுட்டி மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே இறந்து போனது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் இறந்து போன கன்றுகுட்டியை சாலையின் ஒரம் போட்டு வைத்தனர். இதையடுத்து தாய் பசு தனது கன்றுக்குட்டியை மீட்க வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த நபர்களை உதவிக்கு அழைப்பது போலும் கன்று குட்டியின் அருகே சுற்றி, சுற்றி வந்த காட்சி காண்போரை நெகிழச் செய்தது.

எங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன?.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்எங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன?.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்

மேலும் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் வேனை எடுத்துக் கொண்டு சாவகாசமாக சென்றுவிட்டார் ஊரடங்கு நேரத்தில் விதிமுறையை மீறி வாகனத்தில் வந்த நபரால் சுதந்திரமாக சுற்றி திரிந்த கன்றுக் குட்டி பரிதாபமாக இறந்து போனது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Van hits calf near Ponnamalle Road leds the young one death. The Van driver came out during full lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X