புதிய இந்தியா தந்தையே வருக.. ட்விட்டரில் டிரென்டாகும் #vanakkam_modi!
சென்னை: கோ பேக் மோடியை எப்படி ஹேட்டர்கள் பிரபலப்படுத்துகிறார்களோ அதை விட மிகவும் வேகமாக வணக்கம மோடி எனும் ஹேஷ்டேக்கை பாஜகவினர் டிரென்டாக்கி வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து முதல்முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. இவரது வருகையால் தமிழகத்திற்கு ரூ 31 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடைக்கும் என பாஜக பட்டியலிட்டு வருகிறது.
மேலும் பாஜகவினர் மோடியை சமூகவலைதளங்களிலும் பேனர் வைத்தும் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தும் வரவேற்றுகிறார்கள். பாஜகவுக்கு எதிரானவர்கள் கோ பேக் மோடி என ஹேஷ்டேக்கை டிரென்டாக்கி வருகிறார்கள். அதை காட்டிலும் வணக்கம் மோடி எனும் ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்விட்டரில் பயன்படுத்தி வருகிறார்கள்.
வணக்கம்! வாங்க மோடி.. காவி பலூன் பறக்க விட தயாரான பாஜக - தடை விதித்த காவல்துறை

புகைப்படம்
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி வணக்கம் மோடி எனும் ஹேஷ்டேக்கில் பிரதமர் மோடியின் உலகத் தலைவர்கள் புடைச்சூழ மோடி தலைமையில் ஒருங்கிணைந்தது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் தாயின் தலைமகனே
தமிழ் தாயின் தலைமகனே பாரத பிரதமர் மோடி அவர்களே வருக வருக என்கிறார் இந்த வலைஞர்.

பாரதம்
பாரதத்தை உலகத்தின் விஷ்வ குருவாக மாற்றி வரும் நம் பாரத பிரதமர் திரு @narendramodi
@PMOIndia , தமிழக வருகை நல்வரவாகட்டும்.
#வணக்கம்_மோடி என ஹேஷ்டேகுடன் பிரதமரை வரவேற்கிறார் இந்த வலைஞர்.

காப்பீடு திட்டங்கள்
காப்பீடு திட்டங்கள் மூலம் விபத்து காப்பீடு உயிர் காப்பீடு திட்டங்கள் மூலம் மக்கள் நலம் காத்த பாரத பிரதமரே வருக.
#Vanakkam_Modi என்கிறார் இந்த வலைஞர்.

ஊரடங்கு காலம்
ஊரடங்கு காலத்தில் விவசாய விளை பொருட்களை தங்கு தடையின்றி நாடு முழுவதும் கொண்டு செல்ல உதவிய விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் KRY தந்த நல்லவரே வருக.
#Vanakkam_Modi என்கிறார் இந்த வலைஞர்.

டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா தந்த புதிய இந்தியாவின் தந்தையே வருக..
#Vanakkam_Modi என்கிறார் இந்த வலைஞர்.

பெண்கள் எதிர்காலம்
சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana)
பெண்களின் எதிர்காலத்தை காக்கும் பாரத பிரதமரின் திட்டம்.
#Vanakkam_Modi என்கிறார் இந்த வலைஞர்.