சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதி.. ரகுராம் ராஜன் உள்ளிட்டோரின் நியமனத்தில்.. வானதி சீனிவாசனுக்கு வந்த சமூக நீதி சந்தேகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழு தொடர்பான அறிவிப்பு பற்றிதான் இப்போது நாடு முழுக்க பேச்சு. கூகுளில் அதிகம் பேர் இவர்களைப் பற்றி தேடுவதாக கூறுகிறது நடப்பு டிரெண்ட்டிங் நிலவரம்.

சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்

இதற்கு காரணம், ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ, இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலர் எஸ். நாராயணன், சந்தை பொருளாதார வல்லுநர் மற்றும் பேராசிரியர் ஜான் த்ரே, ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை, 5 முத்துக்கள் என வர்ணிக்கின்றன, ஆங்கில ஊடகங்கள்.

வானதி சீனிவாசனுக்கு வந்த டவுட்

வானதி சீனிவாசனுக்கு வந்த டவுட்

இந்த நேரம் பார்த்துதான், பாஜக தலைவர்களில் ஒருவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனுக்கு ஒரு டவுட் வந்துள்ளது. அதை டுவிட்டரிலும் கேட்டுள்ளார் வானதி சீனிவாசன். ஆனால் குறை சொல்ல வேண்டுமே என்று சம்மந்தம் இல்லாமல் வானதி சீனிவாசன் இப்படி ஒரு கருத்தைக் கூறிவிட்டதாக கொந்தளிக்கிறார்கள் திமுக ஆதரவு நெட்டிசன்கள். அப்படி என்ன சொன்னார் வானதி?

சமூக நீதியை தேடும் வானதி

சமூக நீதியை தேடும் வானதி

முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இடம் பிடித்தவர்களின் பெயர்கள், படங்கள் ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ள வானதி சீனிவசான், "தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதி என்ற வார்த்தையை கோட் வேறு செய்துள்ளார்.

 ஜாதி வாரி இட ஒதுக்கீடு

ஜாதி வாரி இட ஒதுக்கீடு

அதாவது ஜாதி வாரியாக இந்த குழுவில் உறுப்பினர்களை நியமிக்கவில்லையாம் தமிழக அரசு. அதனால் சமூக நீதி எங்கே என கேட்கிறாராம் வானதி. திமுக சமூக நீதி கொள்கையுள்ள கட்சி என்பதால், இந்த குழுவிலும் சமூக நீதியை நிலை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே என்று மறைமுக கிண்டலோடு கேள்வி எழுப்பியுள்ளார் வானதி.

ஒரே ஜாதியாம்

ஒரே ஜாதியாம்

அது வேறு ஒன்னும் இல்லை. ரகுராம் ராஜன் உட்பட 3 அறிஞர்கள், ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் கிண்டல் செய்துள்ளார் வானதி என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

வானதி எதிர்பார்ப்பு இதுவா

வானதி எதிர்பார்ப்பு இதுவா

வானதி ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஒரு நெட்டிசன், பொருளாதார அறிஞர், ஒய்.ஜி.மதுவந்தியை, சேர்க்காம விட்டுவிட்டார்களே என்று வானதி சீனிவாசன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார் போலும், என்று பதிலளித்துள்ளார்.

 சாமானியருக்காக குரல் கொடுத்த ரகுராம் ராஜன்

சாமானியருக்காக குரல் கொடுத்த ரகுராம் ராஜன்

மற்றொரு நெட்டிசன், திரு‌. ரகுராம் ராஜனே சமூக நீதிக்கு போதுமே சட்டமன்ற உறுப்பினர் அவர்களே! வங்கிகள் பெறும் வட்டிக்குறைப்பை அப்படியே வங்கி வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் செயலாற்ற வேண்டுமென சாமானிய மக்களின் பார்வையில் இருந்து RBIயை வழிநடத்தி சென்றவராயிற்றே? ஏன் பாஜக அவரை கடுமையாக விமர்சித்தது? என்று கூறியுள்ளார்.

English summary
BJP MLA from Coimbatore south, Vanathi Srinivasan, asking DMK, where is social justice, as more members in the Tamil Nadu CM economy advisory team including Raghuram Rajan are belonging to same caste. Meanwhile people searching Raghuram Rajan caste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X