சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனுக்கு விபூதி பூசி வாழ்த்திய வானதி.. நல்லவேளை காவி நிற விபூதி இல்லை.. டபாய்க்கும் நெட்டிசன்கள்!

மகனுக்கு விபூதி பூசி வாழ்த்து தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு சீட் தராவிட்டாலும், தன் மகனுக்கு காலேஜில் கிடைத்துள்ள பதவியால் ரொம்பவே நெகிழ்ந்து போய் உள்ளார் வானதி சீனிவாசன்.

தமிழக பாஜகவில் முக்கிய பங்கு வகிப்பவர் வானதி ஸ்ரீநிவாசன். கட்சியின் மாநில துணை தலைவர். தமிழக அரசியல் பெரும்பான்மை இடங்களை ஆண்களுக்கே தந்தது போக மீதி உள்ள இடங்களை தக்க வைத்துள்ள ஒரு சில பெண்களில் வானதியும் ஒருவர்.

Vanathi Srinivasan tweet about his son

சின்ன வயசில் இருந்தே படிப்பிலே படு கெட்டிக்காரர் வானதி. படிப்பில் மட்டுமில்லை, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, என பள்ளி, கல்லூரியில் ஒன்றுவிடுவதில்லை வானதி. எல்லாத்திலேயும் தன் முத்திரையை பதித்து விடுவார். இவரை போலவே இவரது வாரிசுகளும் உருவாக ஆரம்பித்துவிட்டன.

ஆதர்ஷ் , கைலாஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்போது ஆதர்ஷ் பற்றின விஷயம்தான் செய்தியாகி உள்ளது. கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம் ஆதர்ஷ். மகன் இப்படி வெற்றி பெற்றதும் வானதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கட்டியணைத்து, நெற்றியில் விபூதி பூசி விட்டு உச்சி முகர்ந்துள்ளார் வானதி.

இது சம்பந்தமான ட்வீட்டும் போட்டுள்ளார். அதில், "Wishing my son @Adarsh_98 for being selected as Chairman , students union of prestigious PSG college of Technology, coimbatore மாணவர் பேரவை தலைவனாக உன் பணி சிறக்கட்டும். PSG யின் பாரம்பரியம், ஆசிரியர்கள் வழிகாட்டல், மாணவர்கள் நலன்.. செயல்படு... மனங்களை வெற்றி கொள்👍" என்று வாழ்த்தி உள்ளார். மகனுக்கு ஆசீர்வதித்து விபூதி பூசிவிட்டு அந்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

வானதியின் இந்த ட்வீட்டுக்கும், வெற்றி பெற்ற "புது தலைவர்"ஆதர்ஷ்-க்கும் நிறைய கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ஒரு தாயின் நெகிழ்ச்சியை பார்த்து பாஜக தொண்டர்கள் பூரித்து போயுள்ளனர். அதேசமயம், "வாழ்த்துகள்..: நீங்களாவது காவி நிறத்தில் நெத்தியில் திருநீறு பூசாம விட்டீர்களே ரொம்ப மகிழ்ச்சி... தமிழ்நாட்டின் வழக்கம் இது தான்.." என்றும் ட்வீட்கள் பறக்கதான் செய்கின்றன.

English summary
TN BJP General Secretary Vanathi Srinivasan wishes his son and tweet about his New Posting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X