சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா எப்படி பரவியது?.. ஜூவுக்குள் விசிட் அடித்த தெரு பூனைகள் காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று தெருப் பூனைகள் மூலம் பரவியதா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வண்டலூர் உயிரியல்பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 9 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

இதில் நீலா என்ற பெண் சிங்கம் நோய் பாதிப்பால் இறந்தது. இதையடுத்து பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தனர்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இதில் மேலும் 2 சிங்கங்களுக்கு சார்ஸ் கோவிட் 2 கெனைன் டிஸ்டம்பர் என்ற புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அந்த 2 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பாதிப்பு

பாதிப்பு

அது போல் மற்ற விலங்குகளுக்கும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிவும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கெனைன் டிஸ்டம்பர் வைரலால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மீண்டும் மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டுள்ளன.

Recommended Video

    Vandalur Zoo-வில் coronavaal ஒரு சிங்கம் உயிரிழப்பு.. 8 சிங்கங்களுக்கு பாதிப்பு
    சிங்கம்

    சிங்கம்

    இந்த நிலையில் வண்டலூரில் சிங்கங்களுக்கு நோய் தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எனினும் கைவிடப்பட்ட தெருபூனைகள் அதிக அளவில் பூங்காவுக்குள் சுற்றி வருகின்றன.

    விலங்குகள்

    விலங்குகள்

    இதன் மூலம் சிங்கங்களுக்கு நோய் தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பூங்காவுக்குள் சுற்றும் தெரு பூனைகளை பிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சார்ஸ் கோவிட் 2 வைரஸை சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு பூனைகள் பரப்ப அதிக வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Vandalor Zoo officials review about how Lions get infected from Corona?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X