சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெற்றியில் இருந்த ஆழமான காயம்.. வாணி ஜெயராமிற்கு நடந்தது என்ன? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வது என்ன?

அதிக ரத்தம் இந்த காயம் வழியே வெளியேறிய காரணத்தால் அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: பாடகி வாணி ஜெயராம் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இந்தியாவில் 19 மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி என்று பல மொழிகளில் இவர் சிறந்த பாடகராக திகழ்ந்து வந்தார்.

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் அவர் தனியாகவே வசித்து வந்தார். வீட்டிற்கு தினமும் மலர் என்ற வேலைக்கார பெண் மட்டும் வந்து செல்வது வழக்கம்.

‛‛இசை உலகில் அவரது பாரம்பரியம் இருக்கும்’.. வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி ‛‛இசை உலகில் அவரது பாரம்பரியம் இருக்கும்’.. வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

மற்றபடி அவரை சந்திக்க அவரின் வீட்டிற்கு பெரிதாக யாரும் வந்தது கிடையாது. வயோதிகம் காரணமாக அவரும் பெரிதாக வெளியே எங்கேயும் செல்ல மாட்டார். அவருக்கு இடையில் அவ்வப்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. வயோதிகம் காரணமாக இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள்தான் அவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி அவரின் உடல்நிலை மோசமாகும் அளவிற்கு நிலை இல்லை. இந்த நிலையில்தான் நேற்று திடீரென அவர் காலமானார்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அவரின் மரணம் இந்திய திரையுலகை உலுக்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். நேற்று அவரின் உடல் போலீசார் மூலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவரின் மரணத்தில் சில சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளன. போலீசார் இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணி ஜெயராம் மரணத்திற்கு உண்மையில் என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர். அவரின் உடல் கண்டு எடுக்கப்பட்டது முதல் பிரேத பரிசோதனை வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

உடல்

உடல்

வாணி ஜெயராம் வீட்டிற்கு நேற்று அவரின் பணிப்பெண் மலர் சென்றுள்ளார். எப்போது செல்வது போல சென்று வீட்டு காலிங் பெல்லை அடித்துள்ளார். 30 நிமிடம் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து மலர் கதவை தட்டி உள்ளார். அப்போதும் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து வாணி ஜெயராம் சகோதரிக்கு மலர் போனில் தகவல் தெரிவித்தார்.அவர் வந்து கதவை தட்டியும் வாணி ஜெயராம் கதவை திறக்கவில்லை. இதையடுத்து போலீசார் வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே தனது படுக்கைக்கு அருகே வாணி ஜெயராம் சடலமாக கிடந்தார்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்து வாணி ஜெயராம் உடலை போலீசார் மீட்டனர். உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்றனர். அவரின் நெற்றியில் காயம் இருந்ததால் இதை சந்தேக மரணமாக போலீசார் பதிவு செய்தனர். உடல்கூராய்வின் முதல் கட்ட ரிப்போர்ட் படி, வாணி ஜெயராம் நெற்றியில் காயம் இருந்துள்ளது. அது என்ன காயம் என்று தெரியவில்லை. தூக்கத்தில் இருந்து விழுந்த போது ஏற்பட்ட காயமா? அல்லது வேறு வகையில் ஏற்பட்ட காயமா என்று தெரியவில்லை. நெற்றியில் இந்த காயம் ஆழமாக இருந்துள்ளது. படுக்கை அறையில் உள்ள டீப்பாயில் விழுந்து காயம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிக ரத்தம் இந்த காயம் வழியே வெளியேறிய காரணத்தால் அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது முதல் கட்ட ரிப்போர்ட்தான். இறுதி அறிக்கையில்தான் உண்மையில் என்ன நடந்தது என்று தெரிய வரும்.

English summary
Vani Jayaram death: What does the initial reports of postmartem say about the legendry singer?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X