சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சு.. "நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..!

நடிகை வனிதா பாஜகவில் இணைவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "நடுவுல வந்தேன்.. நடுவுலயே போயிடறேன்.. பீட்டர்பாலை நீயே வெச்சுக்கோ ஹெலன்" என்று மனம் நொந்து பேசிய வனிதா, இப்போது ரூட் மாறி பாஜக பக்கம் வரப்போகிறாராம்.. இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று சோஷியல் மீடியாவை வட்டமடித்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், பாஜகவில் மாற்று கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும், விஐபிக்களும், திரைப்பிரபலங்களும் தொடர்ந்து இணைந்து வருகின்றன.. இதனால், வெறும் கவர்ச்சி அரசியலையே அக்கட்சி பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன.

வடமாநிலங்களில் எப்படி நடிகர், நடிகைகளை களமிறக்கி கவர்ச்சி அரசியலில் பாஜக இறங்கி உள்ளதோ, அதுபோலவே தமிழக பாஜகவும் அதிரடியில் இறங்கி வருகிறது.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா என திரைப்பட்டாளமே இருக்கின்றன.. இப்போது குஷ்பு இணைந்துள்ளார்.. தேர்தல் சமயத்தில்தான் இது மாதிரியான நட்சத்திரங்களை களமிறக்குவது வழக்கமாக அதிமுகதான்.. ஆனால், இதை பாஜக கையில் எடுத்து வருகிறது. அந்த வகையில், வனிதாவின் பெயரும் தற்போது அடிபடுகிறது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கட்சியில் இணைந்த பிரபலங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பொறுப்புகளை வழங்கி வருகிறது பாஜக தலைமை.. அந்த வகையில், வனிதாவும் கட்சியில் இணைந்த பிறகு அவருக்கான பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக வனிதாவும் சரி, பாஜகவும் சரி, இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

குஷ்பு

குஷ்பு

இருந்தபோதும், இது பாஜகவுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.. குஷ்புவை எடுத்துக் கொண்டால், அவருக்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது... எனினும், நமீதா, குஷ்பு, ஜீவஜோதியை, காயத்ரி ரகுராம் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதன் நோக்கம், பாஜகவின் செயல்திட்டங்களை தங்கள் அசர வைக்கும் பேச்சினால் எல்லா பக்கமும் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்பதால்தான்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த ஸ்டார்கள் எந்த மூலை முடுக்கிற்கு சென்று பேசினாலும், நிச்சயம் மீடியாக்கள் அந்த செய்திகளை கவர் செய்வார்கள். தேர்தல் சமயத்தில், இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டு வரவும் செய்வார்கள்.. ஆனால் வாக்குவீதத்தை அந்த அளவுக்கு பெற்றுவிட முடியாவிட்டாலும், கூட்டத்தை சேர்க்க இவர்களால் முடியும் என்று பாஜக நம்புகிறது.

வனிதா

வனிதா

வனிதாவை பொறுத்தவரை ஒரு நடிகை.. அவருக்கும் அரசியலுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.. ஆனால் சர்ச்சைக்குரிய பேச்சை எதையாவது பேசி, மீடியாவை தன் பக்கம் இழுக்கக் கூடியவர்.. பெண் என்ற முறையில் பல அவதி, அவமானங்களை வனிதா அனுபவித்து வந்தாலும், அதெல்லாம் அரசியலுக்கு எடுபடுமா என்பதுதான் சந்தேகம். ஒருவர் சர்ச்சைக்குரியவர் என்றால், பலம் பொருந்தியவர் என்று அர்த்தம் இல்லை.. அவர் மீது தமிழக மக்களுக்கு என்ன மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றும் தெரியாமல், பப்ளிசிட்டியை பார்த்து மட்டுமே கட்சிக்குள் இழுப்பதும் ஆரோக்கியமான அரசியலா என்று விளங்கவில்லை.

தமிழிசை

தமிழிசை

இதைதவிர, "தஞ்சாவூரில் 2 பொண்டாட்டிக்காரர்கள் இல்லாத வீடே இருக்காது" என்று இவர் பேசிய பேச்சால், இதே பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தந்ததையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. எப்படி பார்த்தாலும், தாமரை மலர்ந்தே தீரும் என்று முழக்கமிட்டு தமிழிசை செய்யாததையா இவர்கள் எல்லாம் வந்து செய்துவிட போகிறார்கள்? என்ற கேள்வியும் நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

English summary
Vanitha Vijayakumar may join BJP soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X