சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய துரைமுருகன்.. மொத்த வாணியம்பாடியும் திமுகவுக்கே.. செம ஆதரவு!

திமுக வெற்றிக்கு வாணியம்பாடி தொகுதியே பிரதான காரணமாக அமைந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    சென்னை: வாணியம்பாடி மக்களுக்கு திமுக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.. ஒட்டுமொத்த வேலூர் தொகுதியில் வாணியம்பாடி மக்களே திமுகவின் வெற்றியை வெகுவாக தீர்மானித்து உள்ளனர்.

    வேலூர் மக்களவை தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

    வன்னியர்கள் ஒரு பக்கம், முதலியார்கள் இன்னொரு பக்கம் இருந்தாலும் இஸ்லாமியர்கள்தான் இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை எப்போதும் நிர்ணயிப்பவர்கள். அதாவது கிட்டத்தட்ட 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன.

    இஸ்லாமிய ஓட்டுக்கள்

    இஸ்லாமிய ஓட்டுக்கள்

    இந்த 3 லட்சத்தை யார் அள்ள போகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் என்பது பொதுவான கணிப்பு. அந்த வகையில் இந்த முறை வன்னியர் தரப்பு கதிர் ஆனந்துக்கும், முதலியார் தரப்பு ஏசிஎஸ்-க்கும் வாக்கு அளித்தாலும், இந்த 3 லட்சம் இஸ்லாமிய ஓட்டுக்களை பெறுவதில்தான் பலத்த போட்டி இருந்தது.

    வெற்றி வாய்ப்பு

    வெற்றி வாய்ப்பு

    திமுக, பாஜகவை பல வகையில் ஒதுக்கி வைத்து, தன்னை முஸ்லீம்களுக்கு ஆதரவானவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தாலும், திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாக மாறியது. இதற்கு உதாரணம் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் தொகுதிகள்தான். அதிலும் வாணியம்பாடியில்தான் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகம் ஆகும்.

    முன்னிலை

    முன்னிலை

    வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி இந்த 3 தொகுதிகளில் திமுக ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்தது. இதற்கு காரணம் இங்கு திமுகவை சேர்ந்தவர்களே எம்எல்ஏக்களாக உள்ளனர். அதேபோல, இருக்கும் 6 தொகுதிகளில் அதிகமாக திமுக உழைத்தது அணைக்கட்டு தொகுதி என்றாலும், அங்கு முன்னிலை பெற்றது என்னமோ அதிமுகதான்.

    நிலோபர் கபில்

    நிலோபர் கபில்

    இருந்தாலும் வாணியம்பாடி தொகுதிதான் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வலுவாக அமைந்தது. இத்தனைக்கும் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். பிரச்சார சமயத்தில் மிக தீவிரமாக வாணியம்பாடியை ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்தவர். அது மட்டுமில்லை, குடியாத்தம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களே எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி

    ஆக மொத்தம், 6 சட்டமன்ற தொகுதிகளில் 4-ல் திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். இருந்தாலும், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள வாணியம்பாடி தொகுதியில், அதுவும் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியில் "சொல்லி வைத்து கில்லி" போல அடித்துள்ளது திமுக.. இதில்தான் அந்த கட்சியின் மொத்த சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் அடங்கி உள்ளது.

    English summary
    vellore lok sabha election. vote result live update: Vaniyambadi Constitution result the main Victory for DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X