சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி!

திமுக நகர செயலாளர் பதவி பறிப்புக்கு காரணம் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "என் கணவரை விட 15 வயசு பெரியவங்க அவங்க.. அக்கா, அக்கான்னு கூப்பிட்டார்.. கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும். அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க.. 2 பேருக்கும் கள்ள உறவு இருந்திருக்கு... இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்' என, வாணியம்பாடி திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் மீது அவரது மனைவி ரம்யா புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சாரதிகுமார் பதவியில் இருந்து விலகி உள்ளார்.. இதற்கு பின்னணி காரணமும் வெளியாகி உள்ளது!

Recommended Video

    பெண் விவகாரம்..வாணியம்பாடி சாரதிகுமார் மீது 9 வழக்குகள்

    சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா.. 28 வயதாகிறது.. இவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவிலும் செய்தியாளர்கள் முன்னிலையிலும் சொன்னதாவது:

    "சாரதிகுமாரை நான் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்ரவரி 10ல் கல்யாணம் செய்தேன்.. 2 வயசில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் என்னை கல்யாணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலம் சட்ட கல்லுாரியில் படித்தபோது, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    சினிமா

    சினிமா

    சத்யபிரியாவுக்கு கல்யாணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். படுப்பது கூட பார்த்தீங்கன்னா, எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும். அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க. ஒரு சினிமாவுக்கு போனால்கூட, அவர் நடுவில் இருப்பார். இதை பற்றி பலமுறை கேட்டு தகராறு வெடித்துள்ளது.

    திமுக தலைவர்

    திமுக தலைவர்

    சத்யபிரியாவுடன் சேர்ந்து, என் கணவர் கும்மாளம் போடுவதை பற்றி, இம்மாதம், 19ம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் தந்தேன்.. அவர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.. உடனே என் கணவர், தாலியை கழற்றி தருமாறு கேட்டு, கழுத்தில் கத்தியை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் புகாரிலும் செய்தியாளர்கள் மத்தியிலும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார்.

    பொறுப்பு

    பொறுப்பு

    இந்த சூழலில் இந்த நிலையில், வாணியம்பாடி நகரப் பொறுப்பை திடீரென ராஜினாமா செய்துள்ளார் சாரதி குமார். குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக காரணம் தெரிவித்துள்ளர். இந்த ராஜினாமா செய்தி, முரசொலியில் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகி உள்ளது.. அதேபோல, வேலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏசி தேவகுமாரும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    உதவி

    உதவி

    இதற்கு காரணம், சாரதி குமாரும் தேவகுமாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மிக நெருக்கமான நட்பு வைத்துள்ளவர்கள்.. சாரதிகுமாரின் கல்யாணத்தை நடத்தியவர்களில் நடத்தியவர்களில் தேவகுமாரும் ஒருவராம்.. அதனால்தான் சாரதிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றதும் தங்கையாக பாவிக்கும் சாரதிகுமாரின் மனைவி ரம்யாவுக்கு தேவகுமார் உதவ முன்வந்திருக்கிறார்.

    காரணம்

    காரணம்

    இதற்கு பிறகுதான், விஷயம் அறிவாலயம்வரை போனதாம்.. இருந்தாலும் போலீஸ் வரை இந்த புகார் போய்விட்டதால், கட்சி தலைமை கடுமையான கோபத்திற்கு ஆளாகி, இவர்களை பொறுப்பில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.. ஆனால் அவர்களாக நீக்குவதற்கு பதிலாக இவர்களே முந்திக் கொண்டு பொறுப்பை ராஜினாமா செய்துள்ளனர் என்கிறார்கள்.

    English summary
    vaniyambadi dmk executives resignation reason due to his family issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X