சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் சிக்கல்? வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெற உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். , பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்க தயங்குவதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிமுக பாமக கூட்டணியை உறுதியாக்குமா அல்லது அதிமுகவில் இருந்து பாமக பிரிந்து தனித்து செயல்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.

இதற்கு எடப்பாடியார் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. அமைச்சர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தனது கொள்கையில் ராமதாஸ் பிடிவாதமாக உள்ளார்.

மௌனம்

மௌனம்

ஆனால் எடப்பாடியாரோ, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கினால் ஒவ்வொரு சமுதாயம் சார்பாகவும் தனித்தனியாக கோரிக்கை எழும் என்பதால் மௌனம் காப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்படி ஒவ்வொரு சமுதயாக வாரியாக இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் சிக்கலை உருவாக்கும் என்பதால் ராமதாஸின் கோரிக்கை எடப்பாடியார் இதுவரை ஏற்கவில்லை.

பாமக

பாமக

இதனால் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் ராமதாஸ் மிக தீவிரமாக இடஒதுக்கீடுக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

ராமதாஸ்

ராமதாஸ்

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட பங்கீடு வழங்க வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றன.

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

அதன்படி, வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படவுள்ளது. பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய உள் இடப்பங்கீட்டை வழங்க தயங்குகிறது. தமிழக அரசின் இந்த தயக்கம் எவ்வகையிலும் நியாயமற்றது.இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம். யாருக்கோ அஞ்சி, நமக்கான இட பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளளார்.

English summary
PMK founder Ramdoss has announced that a massive mass protest will be held on Friday the 29th at 11 am in 38 district capitals of Tamil Nadu demanding reservation of seats for the Vanniyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X