சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய நீரோட்டம் பாயும் கன்னியாகுமரி.. பொன். ராதாவை வீழ்த்த களமிறக்கப்படுகிறாரா வசந்தகுமார்?

கன்னியாகுமரியில் வசந்தகுமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் எம்.எல்.ஏ வசந்தகுமார் பேட்டி-வீடியோ

    சென்னை: வரப்போகும் தேர்தலில் ரொம்ப ரொம்ப சூடாக இருக்க போகும் தொகுதி எது தெரியுமா.. கன்னியாகுமரிதான்ஸ! காரணம் அந்த தொகுதி வேட்பாளர்கள்தான்!

    கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இப்படிதான் பெயரை தாங்கி நிற்கிறது. இந்த பெயருக்கு காரணகர்த்தா மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். தொகுதியில் செல்வாக்குடன் கெத்தாக வலம் வருபவர்.

    ஆனால் போட்டி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று பார்த்தால் அதிமுக அங்கு பலமானதாக இல்லை. அதேபோல திமுகவும் இல்லை. ஒரே ஒரு திமுக எம்எல்ஏதான் அங்கு இருக்கிறார். பெரிய கட்சியான திமுக, அதிமுகவே பலம் இல்லையென்றால், பொன்ராதாவை எதிர்ப்பவர் யார், எந்த கட்சியாக இருக்கும் என்று பார்த்தால், அது காங்கிரஸ்தான் என்று பதில் கிடைக்கிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்

    காங்கிரஸ் வேட்பாளர்

    ஆம்.. கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் இருக்கிறார்கள். இது வேறு எந்தகட்சிக்கும் கிடைக்காத அந்தஸ்து. இதை தவிர நாடார் இன ஓட்டுக்களும் அதிகம். இதையெல்லாம் வச்சு கூட்டி கழித்து பார்த்ததில் வசந்தகுமார் தான் காங்கிரஸ் வேட்பாளர் என ஓரளவு முடிவாகி இருக்கிறது. பொன்.ராதாவுக்கு சரியான போட்டியாக இவர் மட்டுமே இருப்பார் என்று பேசப்படுகிறது.

    பெரிய மைனஸ்

    பெரிய மைனஸ்

    காங்கிரசை வைத்து மத்த வேட்பாளருக்குதான் பலம் என்றால், வசந்தகுமார் இருப்பதாலேயே காங்கிரசுக்கு பலம் என்ற பெயர் இருக்கிறது. பசை உள்ள நபர்.. ஒட்டுமொத்தமாக தேர்தல் நடந்து முடியும்வரை ஒரு பிரச்சனையும் இருக்காது. பாஜகமேல் ஏற்கனவே மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்பது மற்றொரு மைனசாக தொகுதி மக்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இது எல்லாவற்றிற்கும் மேலாக குளச்சல் துறைமுகம் சமாச்சாரம் அப்படியே கிடப்பில் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து பொன்.ராதாவுக்கு பின்னடைவை தரும் என்று சொல்லப்படுகிறது. இங்கு பெரும்பாலும் சிறுபான்மையினரும் வசித்து வருகின்றனர்.

    செம போட்டி

    செம போட்டி

    பொன்.ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் இருவருக்குமே நாடார் சமூக ஓட்டுக்கள் விழுந்தாலும், சிறுபான்மை ஓட்டுகள் யாருக்கு அதிகம் விழுகிறதோ அதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் போட்டி செமயாக இருக்கும் என்பது மட்டும் கன்பார்ம்!

    English summary
    Congress VasanthaKumar is said to be contesting in Kanniyakumari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X