சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழி பேச்சை கேட்கணும்.. ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே வீடியோவில் பார்த்த வசந்தி ஸ்டான்லி

ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே வீடியோ பார்த்து நெகிழ்ந்தார் வசந்தி ஸ்டான்லி

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்

    சென்னை: கனிமொழி மிகுந்த பிரியம் கொண்டவர் மறைந்த வசந்தி ஸ்டான்லி. திமுக பெண் தலைவர்களிலேயே தனக்கென தனி இடம் வைத்திருந்தவர். அனைவராலும் மதிக்கப்பட்டவர். குறிப்பாக கனிமொழியிடம் நெருங்கிப் பழகியவர்.

    எம்பியாக செயல்பட்டபோதும், அதற்கு முன்பும் கூட கனிமொழிக்கு மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர் வசந்தி ஸ்டான்லி. நல்ல பேச்சாளர். சிறந்த பேச்சாளர் என்பதாலேயே கனிமொழியிடம் தனிப் பிரியத்தைப் பெற்றிருந்தார்.

    லோக்சபா தேர்தலில் முதல் முறையாக கனிமொழி போட்டியிடுவதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தார் வசந்தி ஸ்டான்லி. அவருடன் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஆர்வத்துடன் காத்திருந்தார்.

    கவலை

    கவலை

    ஆனால் உடல் நிலை பாதிப்பு அவரை நேரில் சென்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை. இதுவே அவரை மேலும் கவலைக்குள்ளாக்கி விட்டது. கனிமொழி முதல் முறையாக போட்டியிடுகிறார். நேரில் போக முடியலையே என்று வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    படுத்த படுக்கையாக அவர் சிகிச்சையில் இருந்து வந்ததால் கனிமொழி பிரச்சாரத்தை வசந்தியும், வசந்தியின் பேச்சை கனிமொழியும் மிஸ் செய்தனர். இருந்தாலும் கனிமொழியின் பிரச்சாரத்தை பார்த்தாக வேண்டும் என்ற வேகம் மட்டும் வசந்திக்குக் குறையவில்லை.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    கனிமொழியின் பிரச்சார வீடியோவையாவது நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தாராம். இதனால் மருத்துவமனையிலேயே அந்த வீடியோவை வரவழைத்து அவருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர்.

    நெகிழ்ச்சி

    நெகிழ்ச்சி

    கனிமொழி பேச்சையும், அவருக்காக கூடிய கூட்டத்தையும், ஸ்டாலின் வந்து கலந்து கொண்டு பேசிய பிரமாண்டக் கூட்டத்தையும் வீடியோவில் பார்த்து பெரும் நெகிழ்ச்சி அடைந்தாராம் வசந்தி ஸ்டான்லி.

    பெரும் இழப்பு

    பெரும் இழப்பு

    மறைந்த கருணாநிதி, கனிமொழி, மு.க.ஸ்டாலின் மீது தனிப் பிரியத்துடன் வளைய வந்த வசந்தி ஸ்டான்லி, திமுகவினர் மத்தியிலும் நிறைய அன்பைப் பெற்றிருந்தார். வசந்தியின் மறைவு நிச்சயம் கனிமொழி

    English summary
    Late former MO Vasanthy Stanley wanted to campaign for Kanimozhi but could not do the same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X