சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஜெயாவையே காப்பாற்றியவர் சசிகலா'.. மனதில் உள்ளதை கொட்டிய திருமா.. திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

Google Oneindia Tamil News

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுக கறார் காட்டினால் சில அதிரடி முடிவுகளை எடுக்க திருமாவளவன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பது மட்டுமில்லாமல், தனிச் சின்னத்தில் போட்டியிடும் விருப்பத்தையும் திமுக தலைமையிடம் தெரிவித்துவிட்டனர். ஆனால், இதற்கு திமுக ஒப்புக் கொள்ளுமா என்பது வேறு விஷயம்.

நேற்று (மார்ச்.3) திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை அழைப்பில் விசிக பங்கேற்கவில்லை. ஊடகங்களோ 'பேச்சுவார்த்தையை புறக்கணித்த விசிக' என்று நேற்று முழுவதும் செய்திகளை வெளியிட, அக்கட்சி சார்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அவர்களது ஊடகப் பிரிவு எந்த மறுப்பும் சொல்லவில்லை.

 முக்கிய வேலை இருந்தது

முக்கிய வேலை இருந்தது

இந்த நிலையில், இன்று (மார்ச்.4) பேச்சுவார்த்தைக்கு வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம், 'நேற்று கூட்டணி பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்துவிட்டதே' என்று கேட்டதற்கு, 'புறக்கணிக்கவில்லை.. முக்கிய பணிகள் இருந்ததால் வர முடியவில்லை' என்று கேஷுவலாக முடித்துக் கொண்டார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட மீதமில்லாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை விட வேறு என்ன முக்கிய வேலை விசிக-வுக்கு இருந்தது என்று தெரியவில்லை. ஓகே.. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் கூட, 'பேச்சுவார்த்தையை புறக்கணித்த விசிக' எனும் செய்திகளுக்காவது மறுப்பு தெரிவித்திருக்கலாம். அதையும் கூறவில்லை. சரி, மேட்டருக்கு வருவோம்.

 பாஜக அழுத்தம்

பாஜக அழுத்தம்

இன்று பேச்சுவார்த்தைக்கு வந்த திருமாவளவனிடம், 'சசிகலா அரசியல் பின்வாங்கல்' கேள்விக்கு சற்றே கவலையுடன் பதில் அளித்த திருமா, "சசிகலா அவர்களின் அறிக்கை மிகவும் நுட்பமாகவும், கவனமாகவும் உள்ளது. அவர் தன்னுடைய உடல்நலம் கருதி, மனநலம் கருதி அமைதியாக இருப்போம் என்று முடிவு எடுத்திருக்கலாம். அல்லது பாஜக ஏதேனும் அழுத்தம் கொடுத்து, நெருக்கடி கொடுத்து இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம். அல்லது அதிமுகவையும், அமமுக-வையும் இணைப்பதற்கு, தான் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதி, தான் அரசியலில் இருந்து விலகி இருந்து அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கலாம் என்ற 'தொலைநோக்கு' பார்வையோடு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

 நெருக்கடிக்கு அஞ்சாத சசிகலா

நெருக்கடிக்கு அஞ்சாத சசிகலா

எது எப்படியாக இருந்தாலும் கூட, திமுகவை பொது எதிரியாகக் கருதி, அதை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்பதை சசிகலா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ஆகவே, இது அதிமுக, அமமுக தொண்டர்களிடையியே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.. தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் பாஜகவின் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சசிகலா அம்மையார் அவர்கள் பாஜகவின் அழுத்தத்திற்கு ஆட்படவில்லை என்பதால் தான் பல நெருக்கடிகளை அவர் சந்திக்க நேர்ந்தது. ஒருவேளை பாஜகவின் நெருக்கடிக்கு சசிகலா அம்மையார் இணங்கிப் போயிருந்தால், அவர் இன்னும் கூட பாதுகாப்பாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவர் தொடக்கத்தில் இருந்தே பாஜக அழுத்தத்திற்கு ஆளாகவில்லை. ஆனால், தற்போது அவரது அறிக்கையைப் பார்த்தால், அவரும் பாஜக நெருக்கடிக்கு ஆளாகிவிட்டாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை" என்றார்.

கடைசியாக, திமுக கூட்டணியில் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு 'அதிலென்ன சந்தேகம்?' என்றார்.

 விமர்சிக்காத திருமா

விமர்சிக்காத திருமா

நமது பொது எதிரி திமுகவை வீழ்த்துவதே நமது ஒரே நோக்கம் என்று அறிவித்த சசிகலாவை, அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் விட எவரும் இத்தனை மென்மையாக டீல் செய்திருக்க முடியுமா என்றால் சந்தேகமே. சசிகலா பற்றி கேட்ட ஒரு கேள்விக்கு 6 நிமிடங்களுக்கு மேல் உருக்கமாக பதில் அளித்திருக்கிறார் திருமா. ஒரு இடத்தில் கூட சசிகலாவை விமர்சித்தோ, அல்லது குறைந்த பட்சம் டிடிவியை விமர்சித்தோ அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதை விடுங்க... திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் நிறைவேறாது என்று கூட சொல்லவில்லை.

 மாற்று ஆப்ஷன்

மாற்று ஆப்ஷன்

சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர் அளித்த நீண்ட பதில், சசிகலா ஆதரவாளர்களுக்கோ, அமமுக தொண்டர்களுக்கோ அளித்த பதில் போல் தெரியவில்லை. அது திமுக தலைமைக்கு தெரிவித்த பதிலாகத் தான் பார்க்க முடிகிறது. சசிகலா பாஜக நெருக்கடிக்கு ஆளாகவில்லை என்கிறார், டிடிவி தினகரன் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை என்கிறார், சசிகலாவின் தொலைநோக்கு பார்வை என்கிறார்.. இவை அனைத்தையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால், நீங்கள் வைக்கும் நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லை எனில், எங்களுக்கும் மாற்று ஆப்ஷன் இருக்கிறது என்று கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லும் ஸ்டாலினுக்கு திருமா உணர்த்தியிருப்பதாகவே கூறுகின்றனர்.

 ஒரு படி மேல்

ஒரு படி மேல்

திருமாவின் இந்த ஒரு பேட்டி மட்டும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. 2018ல் தஞ்சையில் நடந்த சசிகலா கணவர் எம்.நடராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமா பேசிய வார்த்தைகள் தான் ஹைலைட். அந்த நிகழ்வில் திருமாவளவன், சீமான், தா.பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மற்றவர்கள் நடராஜனின் தமிழ்ப்பற்று, மனிதநேயம் குறித்து பேசிய நிலையில், திருமா ஒரு படி மேலே போய் சசிகலாவை புகழ்ந்து தள்ளினார்.

 காட்டிக் கொடுக்காத சசி

காட்டிக் கொடுக்காத சசி

அந்த நிகழ்வில் பேசிய திருமா, "ஜெயலலிதா அ.தி.மு.க.வைக் காத்தார். அந்த ஜெயலலிதாவையே நடராஜனும், சசிகலாவும் தான் காத்தார்கள். இன்று ஜெயலலிதாவின் சாதிப்பெயரைச் சொல்லி அவரை தங்களவராக நினைப்பவர்கள், அவரது சிரமமான காலகட்டத்தில் உடன் இல்லை. ஆனால் சசிகலாதான் உடன் இருந்தார். அவர் நினைத்தால் ஜெயலலிதாவை காட்டிக்கொடுத்திருக்கலாம். அப்ரூவராக மாறியிருக்கலாம். ஆனால் அனைத்துத் துன்பங்களையும் தாங்கி ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தார்.

 நிறைவேற்றிய உண்மையான தோழி

நிறைவேற்றிய உண்மையான தோழி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தனது படம் வெளியாகக் கூடாது என விரும்பினார். அந்த நேரத்தில் சசிகலாவை நோக்கி எத்தனையோ புகார்கள் வீசப்பட்டன. ஆனால் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற, படங்களை வெளியிடாமல் இருந்தார் சசிகலா" என்றும் திருமாவளவன் பேசினார். கடைசியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் திறமை வாய்ந்தவர் என்று திருமா பேச, அங்கு கூடியிருந்த பலரும், "சசிகலா குடும்பத்தினர் மீது திருமாவுக்கு எப்படி இவ்வளவு பற்று?" என்று வெளிப்படையாக முணுமுணுத்ததை கேட்க முடிந்தது.

இந்த சூழலில், திமுக தங்கள் கோரிக்கைக்கு கொஞ்சம் கூட ஒத்து வராமல் கறார் காட்டினால், திருமா யாரும் எதிர்பார்க்காத சில அதிரடி முடிவுகளை கூட எடுக்க வாய்ப்பிருக்கிறது.

English summary
VCK chief Thirumavalavan about sasikala - திருமாவளவன்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X