சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கோலப் போராட்டம்- விசிக, காங். களமிறங்கின

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகமே போர்க் கோலம் வரைகிறது... எடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

    சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்ததுக்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவையும் கோலம் போட்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் 6 பேர் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

    VCK, Cong also join hands with Kolam Protest against CAA

    இதனையடுத்து திமுகவினர் தமிழகம் முழுவதும் வீடுகளில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிரான வாசகங்களுடன் கோலம் போட்டு போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளும் கோலம் போட்டு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

    சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமது இல்லத்தின் முன்பாக கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த மாதம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகளில் கோலம் போட்டு சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை எதிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோல மாவுக்கு வந்த கிராக்கி.. மாறி மாறி கோலம் போடும் திமுக, பாஜக.. சூடு பிடிக்கும் போராட்டங்கள்! கோல மாவுக்கு வந்த கிராக்கி.. மாறி மாறி கோலம் போடும் திமுக, பாஜக.. சூடு பிடிக்கும் போராட்டங்கள்!

    மேலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு ஆங்கிலம், தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளை கொண்டாடப் போவதும் இல்லை எனவும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

    இதேபோல் மகிளா காங்கிரஸ் கட்சியினரும் கோலம் போட்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    English summary
    VCK and Congress also joined hands with the Kolam Protest against CAA and NRC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X