• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முதல்வர் ஸ்டாலினே களமிறங்குவது பெரும் நம்பிக்கை.. குறை மட்டுமே சொல்கிறது அதிமுக.. திருமாவளவன் பளீர்

Google Oneindia Tamil News

சென்னை: "மழை வெள்ள பாதிப்பு உள்ளது.. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. வரும் காலங்களில் இது போன்று சென்னையில் மழை தண்ணீர் தேங்குவதை தவிர்க்க தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதிச் சமுகங்களின் ஒற்றுமை எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதன் சுருக்கம் இதுதான்:

உடைக்காக படிக்கிற காலத்திலேயே முக்கியத்துவம் தர மாட்டேன்.. தலையைகூட கையாலேயே வாரி கொள்வேன். 4 விரல்தான் எனக்கு சீப்பு.

இனி எப்படி பேசுவார்.. திருமாவளவன் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.. பாஜக நாராயணன் கடும் தாக்கு இனி எப்படி பேசுவார்.. திருமாவளவன் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.. பாஜக நாராயணன் கடும் தாக்கு

 வேட்டி - சட்டை

வேட்டி - சட்டை

அரசியலில் உள்ள மற்ற தலைவர்கள் எல்லாரும் வேட்டி சட்டை போட்டுட்டு மேடையில் மிடுக்காக உட்காருகிறார்கள், நீங்கள் மட்டும் ஏன் இப்படி பேன்ட் சட்டை போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.. அரசியலுக்காக நான் உடையை மாற்ற விரும்பவில்லை.. அரசியலுக்காக உடை மாற்றுவது ஏதோ திட்டமிட்டு வேடம் தரிப்பது போல உள்ளது... இயல்பாகவே இருக்க விரும்புகிறேன்.. கல்லூரியில் எப்படி இருந்தேனோ, அப்படியே தான் அரசியலும் பயணிக்க விரும்புகிறேன் என்று சொல்வேன்.

 மோடி அரசு

மோடி அரசு

இன்றைக்கு மோடி அரசு மெத்தனமாக இருக்கிறது.. தோல்வி அடைந்த அரசாக உள்ளது.. விவசாயிகளிடம் தோற்று போன அரசாக உள்ளது.. இப்படிப்பட்ட இந்த அரசு வெறும் சாதி வெறியையும், மதவெறியையும் தூண்டிவிடுகிற அரசாக இருக்கிறது.. மீண்டும் இந்த அரசு தப்பித்தவறி அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், சமூகநீதியை பெறுகிற எல்லா சமூகங்களும், இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும் என்கிற கருத்துருவாக்கத்தை விடுதலை சிறுத்தைகள் செய்கிறது.

அவதூறுகள்

அவதூறுகள்

திருமாவளவனை கூட்டணியில் சேர்த்து கொண்டால், கட்சி தோற்று போய்விடும்.. திருமாவளவன் பிற சமூகங்களுக்கு எதிரி, திருமாவளவன் இந்து சமூக பெண்களுக்கு எதிரி என்றெல்லாம் அவதூறுகள் பரப்பப்பட்டன.. அதையும் தாண்டி விசிக எங்களுடன்தான் இருப்பார்கள் என்று உறுதியாக முடிவெடுத்தார் அன்றைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, இன்றைய தலைவர் ஸ்டாலின்.. விசிக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இது யாருமே அவதூறு பரப்ப முடியாது.

பதிலடி

பதிலடி

தமிழகத்தில் வேரூன்றிவிடலாம் என்று திரும்ப திரும்ப பகீரத முயற்சியை மேற்கொண்டு வருகிற பாஜகவுக்கு இனி எந்த காலத்தில் இங்கு தலைவைத்து படுக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும்.. அவங்க தப்பித்தவறி ஆட்சிக்கு மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் ரொம்ப ஆபத்து" என்று பேசினார்... கருத்தரங்கம் நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் சொன்னதாவது:

நம்பிக்கை

நம்பிக்கை

தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. வரும் காலங்களில் இது போன்று சென்னையில் மழை தண்ணீர் தேங்குவதை தவிர்க்க தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

சசிகலா

சசிகலா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும்.. சசிகலாவின் செயல்பாடு அதிமுக தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் பொது மக்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக இருக்கிறேன்.

அதிமுக

அதிமுக

மழை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஆட்சியை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். இவ்வகையான முரண்பாடுகளை களைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார்.

English summary
VCK Leader Thirumavalavan praises CM MK Stalins activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X