சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார் என்றும் விரைவில் பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்றும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முருகுமாறன் (48450) வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட அதன் தலைவர் திருமாவளவன் ( 48363) தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தேர்தல் அதிகாரி விஜயராகவன் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவுமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள்

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தேர்தல் அதிகாரி நிராகரிப்பட்ட தபால் வாக்குகளை பிரித்து நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். நிராகரிக்கப்பட்ட 102ல் சிலவற்றில் ஓட்டுசீட்டில் இல்லையென்றும், பலவற்றில் சான்றொப்பம் இல்லை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

 அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ

இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றியை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

 பெரியார் மாமலை

பெரியார் மாமலை

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், பெரியார் அவர்களை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள் பெரியார் கொள்கை பகைவர்களை எதிர்த்தார் கடுமையாக போராடினார்.

பெரியார் வாழ்க

பெரியார் வாழ்க

மூடநம்பிக்கை எதிர்த்தவர் யாரும் மறுப்பதற்கில்லை. பெரியாரை யாரும் வீழ்த்த முடியவில்லை. தேர்தல் அரசியலில் அண்ணாவும் கலைஞரும் மேல் மேலும் பெரியாரின் கொள்கைகளை வலு சேர்த்தார்கள், சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார். ரஜினி பகடை காயாக மாறி விடுவாரோ, இல்லை அது தான் அடையாளமாக இருந்தாலும் அது அரசியல் நிலைப்படாக இருந்தால் அந்த கனவு பலிக்காது. பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார்.

 பெரியார் இல்லாமல்

பெரியார் இல்லாமல்

பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடமுடியாது எனதை அவர் விரைவில் உணர்ந்து செயல்படுவார். பொது தேர்வுகளை பொறுத்தவரை 5 ம் வகுப்பிற்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும்...தமிழில் வழிப்பாடு நடத்தவும் வேண்டும் பிப்22ம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விசிக திருச்சியில் தேசம் காப்போம் என்ற பேரணி நடைப்பெற உள்ளது" இவ்வாறு கூறினார்.

English summary
rajini periyar row: vck leader thirumavalavan said, Rajinikanth submits to Sung Parivar's views
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X